சென்னை: இந்தியாவின் மிக பெரிய காப்புறுதி நிறுவனமான லைப் இன்சூரன்ஸ் கார்ப்ரெஷன் ஆஃப் இந்தியா, 2014ஆம் நிதியாண்டில் சுமார் 40,000 கோடி ரூபாயை உள்நாட்டு சந்தையில் முதலீடு செய்ய திட்டமிட்டுள்ளதாக, அந்நிறுவனத்தின் தலைவர் எஸ்.கே. ராய் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியில் தெரிவித்தார்.
மேலும் அவர், " முதலில் ஐடி மற்றும் பார்மா துறைகளில் முதலீடு செய்யவுள்ளோம், அதனை தொடர்ந்து வங்கி, உள்கட்டமைப்பு, வீட்டுவசதி மற்றும் ஆட்டோமொபைல் துறைகளில் முதலீடு செய்வோம்" என தெரிவித்தார்.

இந்திய சந்தையில் அதிகளவில் முதலீடு செய்வது எல்ஐசி தான் என்பது குறிப்பிடதக்கது.
மேலும் இன்று பங்கு சந்தை நல்ல முன்னேற்றம் கண்டது, வர்த்தக துவக்கத்திலேயே கூர்மையாக உயர்ந்து. மும்பை பங்கு சந்தையில் 467.38 புள்ளிகளி உயர்நது 20882.89 புள்ளிகளை தொட்டது. நிப்டியில் 143.5 புள்ளிகள் உயர்ந்து 6189.35 புள்ளிகளை தொட்டது.


Click it and Unblock the Notifications