மும்பை: உள்கட்டமைப்பு துறையில் முன்னணி நிறுவனமான லார்சென் அண்ட் டௌப்ரொ (L & T ) நிறுவனம், கடந்த வெள்ளியன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கடந்த காலாண்டில் சில ஒருதர லாபங்கள் நிறுவனத்திற்கு கிடைக்காததால், அதன் நிகரலாபம் 14% வீழ்ச்சி அடைந்து 977.5 கோடி ரூபாய் என கூறியுள்ளது.
மேலும் இந்நிறுவனத்தின் 2ஆம் காலாண்டு முடிவுகளை விவரமாக இப்பொழுது பார்ப்போம்.
நிகர லாபம்
இந்நிறுவனம் இரண்டாம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து, இந்நிறுவனத்தின் நிகர லாபம் 1,137.3 கோடி ருபாய் என அறிவித்திருகின்றது. இதில், விதிவிலக்கான லாபம் 214.3 கோடி ரூபாய் மற்றும் அசாதாரண லாபம் 52.9 கோடி ரூபாயும் அடங்கும்.
விற்பனை
இருப்பினும், L & T யின் மொத்த விற்பனை நடப்பு காலாண்டில் சுமார் 10% உயர்ந்து 14,505.5 கோடி ரூபாயாக இருந்தது. இது, கடந்த நிதியாண்டின் ஜூலை- செப்டம்பர் காலாண்டு விற்பனை 13,195.23 கோடி ரூபாயாக இருந்தது என மும்பை பங்கு சந்தைக்கு அளித்த அறிக்கையில் தெரிவித்துள்ளது.
விற்பனை உயர்விற்கு காரணம்??..
இந்நிறுவனத்தின் மின்திறன், ஹைட்ரோகார்பன், உலோகவியல் மற்றும் பொருள் கையாளும் துறைகளின் வருவாய் நிகழும் காலாண்டில் வீழ்ச்சி அடைந்த போதிலும், உள்கட்டமைப்பு துறையின் சிறந்த செயல்திறன் மற்றும் "இதர" தொழில் துறைகள் லாபம் தான் இந்த விற்பனை உயர்விற்கு காரணம் எனத் தெரிவித்துள்ளது.
53% உயர்வு
உள்கட்டமைப்பு விற்பனைத்துறையின் வருவாய் 30.76% உயர்ந்து 7,198.44 கோடி ரூபாய் என அறிவித்தது. மேலும் "இதர" தொழில் துறைகளான, ஒருங்கிணைக்கப்பட்ட பொறியியல் துறைகள், கப்பல் கட்டுதல் மற்றும் இடமேம்பாடு தொழில்களின் வருவாய் 53% உயர்ந்து 527.36 கோடி ரூபாயாக இருந்தது.
வீழ்ச்சி அடைந்த துறைகள்
இன்னொருபுறம், நீரகக்கரிமம் தொழிலின் வருவாய் 9% வீழ்ச்சி அடைந்து 2,231.6 கோடி ரூபாயாகவும், மின்திறன் தொழில் வருவாய் 40% வீழ்ச்சி அடைந்து 1,186.16 கோடி ரூபாயாகவும், உலோகவியல் மற்றும் பொருள் கையாளும் துறைகளின் வருவாய் 23% வீழ்ச்சி அடைந்து 1,115.11 கோடி ரூபாயாகவும் இருந்தது.
நிறுவனத்தின் மொத்த செலவினம்
L&T யின் மொத்த செலவு 13,324.17 கோடிகளை ஈட்டியுள்ளது. இது அதனுடைய நிகர விற்பனையில் இருந்து 91.8 சதவீதமாகும்.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?



Click it and Unblock the Notifications