மும்பை: ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம், கடந்த வெள்ளிக்கிழமை அன்று, அமெரிக்க செல்லும் தனது ஜிஎஸ்எம் (GSM) போஸ்ட்பைட் வாடிக்கையாளர்களுக்கு ரோமிங் சலுகைகட்டனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம், டேட்டா யூசெஜ் 98 சதவிதம் மற்றும் அவுட்கோயிங் கால்கள் 76 சதவிதம் வரை சேமிக்கலாம்.
மேலும் இந்நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 30 நாட்கள் வாலிடிட்டியுடன் இந்த ரோமிங் பாக் 849 ருபாய்க்கு சந்தையில் கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

"அமெரிக்காவில் தங்க இருக்கும் எல்லா ஜிஎஸ்எம் போஸ்ட்பைட் வாடிக்கையாளர்களுக்கு, டேட்டா யூசெஜ் மற்றும் வாயிஸ் கால்கள் பயன்படுத்துவதற்காக மட்டுமே இந்த பிளான் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதனால், குறிப்பிடத்தக்க சேமிப்பைப் பெறலாம்." என்று ரிலையன்ஸ் கம்மியுனிகேஷன்ஸ் நிறுவனத்தின் முதன்மை ரெவின்யு அதிகாரி கூறியுள்ளார்.
இந்த திட்டத்தின் மூலம் வாடிக்கையாளர்கள் சர்வதேச ரோமிங்கில் 1 MB டேட்டா 10 ருபாய் தான். ஆனால், இதன் பேஸ் டாரிப் 1 MB க்கு 614.4 ருபாய் ஆகும். இந்தியாவிற்கு பேசும் அவுட்கோயிங் வாயிஸ் கால் ஒரு நிமிடத்திற்கு 40 ருபாய் ஆகும். இதன் பேஸ் டாரிப் ஒரு நிமிடத்திற்கு 165 ருபாய் ஆகும்." என இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
இன்கமிங் கால்ஸ் பேஸ் டாரிப் ஒரு நிமிடத்திற்கு 80 ருபாய் ஒப்பிடுகையில், இதில் ஒரு நிமிடத்திற்கு 40 ருபாய் ஆகும். மேலும், லோக்கல் அவுட்கோயிங் வாயிஸ் கால் மற்றும் சர்வதேச கால்கள் ஒரு நிமிடத்திற்கு 40 ருபாய் எனவும் தெரிவித்தது.
இந்நிறுவனம், இந்த "ஆசம் அமெரிக்கா பாக்" திட்டம் வருடம்தோறும் அமெரிக்கா செல்லும் இந்திய சுற்றுலா
பயணிகளுக்கு பெரும் பலனைத்தரும் என கூறியுள்ளது.
More From GoodReturns

தங்கம் விலை - 40 ஆண்டுகளில் இல்லாத வீழ்ச்சி.. இந்திய மக்களுக்கு அடித்தது ஜாக்பாட்..!

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !



Click it and Unblock the Notifications