சென்னை: இந்தியாவில் குறைந்த கட்டண விமான சேவையை அளிக்கும் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம், நவம்பர் 22 முதல் தொடங்கவுள்ள தனது மதுரை-துபாய் இடையிலான தினசரி விமானத்திற்கான பதிவுகளை தொடங்கியுள்ளது.
இந்தியாவில் ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் ஏற்கனவே டெல்லி, மும்பை, கொச்சி, அகமதாபாத் ஆகிய நகரங்களுக்கும் துபாய்க்கும் இடையே விமான சேவையை மேற்கொண்டுள்ளது. தற்போது இதில் 5வது நகராக மதுரை இணைகிறது.

இந்த ஏர்லைன் அறிமுகச்சலுகைக் கட்டணமாக ஒரு வழிக்கு வெறும் Rs.6999 அளிக்கின்றது. மேலும், சென்று திரும்பும் கட்டணம் Rs.13,999 ஆக அளிக்கின்றது.
இந்த விமானம் மதுரையிலிருந்து இரவு 11.35 மணிக்கு புறப்பட்டு அதிகாலை 02:20 மணிக்கு துபாய் அடையும். பின்னர், துபாய் இருந்து அதிகாலை 03:50 மணிக்கு புறப்பட்டு மதுரைக்கு காலை 09:45 மணிக்கு வந்தடையும் என்று ஸ்பைஸ்ஜெட் நிறுவனம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications