அமேசான், ஈபே நிறுவனத்திற்கு போட்டியாக களம் இறங்கும் ரிலையன்ஸ்!!

மும்பை: ஆன்லைன் சில்லறை வணிகசந்தையில் ஜாம்பவானாக விளங்கும் அமேசான், ஈபே போன்றவற்றிக்கு போட்டியாக ரிலையன்ஸ் நிறுவனம் களம் இறங்க உள்ளது. மேலும் இத்திட்டத்தை இன்னும் 6 - 8 மாதங்களில் செயல்படுத்த ரிலையன்ஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இந்த திட்டத்திற்காக ரிலையன்ஸ் ரீடேல் நிறுவனத்தின் தொழில்நுட்ப குழு பணியாற்றி வருகிறது, மேலும், இதன் செயல்முறைத் திட்டம் சந்தையில் ஒரு தனி இடத்தை பிடிக்கும் என ரிலையன்ஸ் நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நிறுவனம், முகேஷ் அம்பானியின் தலைமை வகிக்கும் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸின் ஒரு பகுதி ஆகும்.

சமீபத்தில் காலாண்டு முடிவுகளின்போது ஆய்வாளர்களிடம் இத்திட்டதை தாக்கல் செய்தபோது, நாங்கள் சில்லறை வணிகத்தில் ஈடுபட பல வழிகளை பின்பற்ற வேண்டும் என்பதை தெரிந்து கொண்டோம். மேலும், நிறுவனம் இத்திட்டத்தில் சிறந்த கட்டமைப்பை உருவாக்கி கொண்டு வருகிறது என அந்நிறுவனத்தின் அதிகாரிகள் தெரிவித்தனர்.

1500 விற்பனை நிலையங்கள்

1500 விற்பனை நிலையங்கள்

ரிலையன்ஸ் நிறுவனமானது 1500 சில்லறை விற்பனை நிலையங்களை இந்தியா முழுவதும் நடத்தி வருகின்றது. அவை ஹைபர்மார்கெட், டிஜிட்டல் விற்பனை நிலையங்கள், நகை வியாபாரம், ஆடை விற்பனை நிலையங்கள் என நாடு முழுவதும் 136 நகரங்களில் இயங்கி வருகின்றது.

காலாண்டு முடிவுகள்

காலாண்டு முடிவுகள்

செப்டம்பர் மாதம் முடிவடைந்த காலாண்டில், நிறுவனத்தின் விற்பனை 31% அதிகரித்து 3,456 கோடி ரூபாயாக இருந்தது. நடப்பு ஆண்டு 2014 முன்பகுதில் அதன் லாபம் இதர வரிகளை தாண்டி 165 கோடி ரூபாய் என்ற அளவை தொட்டது.

மின்வணிக சந்தை

மின்வணிக சந்தை

டெக்னோபாக் அட்வைசெர்ஸ் என்ற கன்சல்டன்சி நிறுவனத்தின் படி, இந்தியாவின் மின்வணிக சந்தையில் போக்குவரத்து சார்ந்த துறைகள் தான் அதிக அளவில் இருப்பதாகவும், அதன் மதிப்பு தற்போது 10 பில்லியன் டாலர் எனவும் 2020 ஆண்டிற்குள் அது 200 பில்லியன் டாலரை அடைய வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவித்துள்ளது.

70 பில்லியன் டாலர்

70 பில்லியன் டாலர்

இதில், ஆன்லைன் சில்லறை வணிகம் ஆண்டுக்கு 600 மில்லியன் டாலர் ஆகவும், 2020 ஆண்டிற்குள் 70 பில்லியன் டாலராக அதிகரிக்க வாய்ப்பு உள்ளது எனவும் தெரிவித்துள்ளது.

மார்க்கெட் பிளேஸ் மாடல் என்றால் என்ன?

மார்க்கெட் பிளேஸ் மாடல் என்றால் என்ன?

மார்க்கெட் பிளேஸ் மாடலில், மின்வணிக நிறுவனங்கள் நேரிடையாக பொருட்களை விற்பனை செய்யாது. இது விற்பனை நிறுவனங்களுக்கு தங்களின் பொருட்களை விற்கும் தளமாகவே இருக்கும். இதன் முடிவாக, மின்வணிக நிறுவனங்களுக்கு, விற்பனையில் ஒரு சதவிகிதம் அல்லது லிஸ்டிங் கட்டணம் மட்டுமே கிடைக்கும்.

அமேசான்

அமேசான்

இந்தியா வெளிநாட்டு முதலீடுகளை இத்தகைய மின்வணிகத்தில் ஈடுபடுவதை தடை செய்துள்ளது. இந்த தடையும் மீறி அமேசான் போன்றவை நம் நாட்டில் செயல்புரிய தொடங்கியுள்ளது. கடந்த வருடம் அரசு, வெளிநாட்டு சூப்பர்மார்க்கெட் ஆப்பரேட்டர்களுக்கு 51% உள்ளூர் நிறுவங்களின் பங்குகளை சொந்தமாக்க அனுமதி வழங்கி உள்ளது.

மின்வணிக நிறுவனங்கள்

மின்வணிக நிறுவனங்கள்

இந்தியாவின் மின்வணிக நிறுவனங்களான ஜபோங்.காம், ஏபி.காம் ,ஸ்நாப்டீல்.காம் , ப்ளிப்கர்ட்.காம் போன்றவை 9 ஆண்டுகளுக்கு முன் வந்த ஈபே மற்றும் இந்த ஆண்டு ஜூன் மாதம் நுழைந்த அமேசான் போன்ற நிறுவனங்களுடன் சேர்ந்து ஒரு சிறு பகுதியாகவே திகழ்கிறது. தற்போது ரிலையன்ஸும் களத்தில் இறங்குகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+