ஒரே மாதத்தில் 8 லட்ச கோரிக்கைகளை நிறைவேற்றியது ஓய்வூதிய அமைப்பு!!

டெல்லி: பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனம் (ஈ.பி.எஃப்.ஓ), இந்தியாவில் பணி ஓய்வு நிதி நிறுவனமாக செயல்பட்டு வருகிறது. ஈ.பி.எஃப்.ஓ கடந்த செப்டம்பர் மாதத்தில் மட்டும் நாட்டில் உள்ள 123 அலுவலகங்களில் 7,96,759 கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளது. சென்ற வருடம் இதே மாதம் 7,49,639 கோரிக்கைகளே நிறைவேற்றப்பட்டது.

செப்டம்பர் 2013-ல் ஈ.பி.எஃப்.ஓ. நடத்திய சீராய்வு சந்திப்பில், தனது 123 அலுவலகங்கள் மூலமாக 7,96,759 கோரிக்கைகளை நிறைவற்றியுள்ளது தெரிய வந்துள்ளது. இதே செப்டம்பர் 2012-ல் 7,49,639 கோரிக்கைகள் மட்டுமே நிறைவற்றப்பட்டது என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தெரிவித்துள்ளது.

50 சதவீதத்திற்கும் மேலான ஈ.பி.எஃப்.ஓ. அலுவலகங்கள், கோரிக்கை மனுக்கள் சமர்பித்த 10 நாட்களுக்குள் 80 சதவீத கோரிக்கைகளை நிறைவேற்றியுள்ளனர். உஜ்ஜைன், க்வாலியர், உதய்பூர், ஜபல்பூர், ஆக்ரா மற்றும் லக்ஷ்மி நகர் ஆகிய இடங்களில் உள்ள அலுவலகங்களில் 3 நாட்களுக்குள் 80 சதவீத கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டுள்ளன.

குறை ஒன்றும் இல்லை..

குறை ஒன்றும் இல்லை..

அதே போல் செப்டம்பர் மாதத்தில், ஈ.பி.எஃப்.ஓ. 16,586 குறைகளை நிவர்த்தி செய்துள்ளன. அதனால் குறைகளின் எண்ணிக்கை 6000-மாக குறைந்துள்ளது. இதற்கு முன் குறைகளின் எண்ணிக்கை 25,000-ஆக இருந்தது. 101 அலுவலகங்களில் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாக நிலுவையில் இருக்கும் குறைகள் பூஜியம் என்பது குறிப்பிடத்தக்கது.

ரூ.6,018 கோடி..

ரூ.6,018 கோடி..

செப்டம்பர் மாதம் மட்டும், செலுத்துத் தொகையாக 6,018 கோடிகளை ஈ.பி.எஃப்.ஓ. பெற்றது. அதற்கு முந்தைய மாதமான ஆகஸ்ட் மாதத்தில் ஈ.பி.எஃப்.ஓ. 5,961 கோடியாக இருந்தது. செப்டம்பர் மாதம் வரை 4.55 கோடி கணக்குகள் இற்றைப்படுத்தப் பட்டுள்ளது.

புதிய இலக்குகள்

புதிய இலக்குகள்

தன்னுடைய செயல்திறனை அதிகரிக்கும் விதமாக ஈ.பி.எஃப்.ஓ. புதிய இலக்குகளை நிர்ணயித்துள்ளது. ஒரு கோரிக்கையை 3 நாட்களில் நிறைவேற்றும் நீண்ட கால இலக்கு, தலைவிகித ஆக்கத்திறனை அதிகரிக்கும் வகையில் ஒரு நாளைக்கு 15 கோரிக்கைகளை நிறைவேற்றுதல், 'EPFiGMS' தளத்தில் மூலம் பதிவாகியுள்ள குறைகளை 10 நாட்களுக்கு தீர்ப்பது.

கோர் பேங்கிங் சொல்யுஷன்

கோர் பேங்கிங் சொல்யுஷன்

பாதுகாப்பான, வேகமான முறையில் பென்ஷன் பணத்தை அளிக்க கோர் பேங்கிங் சொல்யுஷனின் (CBS) சேவையை பயன்படுத்தியுள்ளது. ஓய்வூதியம் பெறும் 45 லட்ச மக்களுள் 84 சதவீத நபர்களுக்கு மாதந்திர பென்ஷன் CBS மூலமாக பட்டுவாடா செய்யப்படுகிறது.

கே.கே.ஜலன் கூறுகையில்..

கே.கே.ஜலன் கூறுகையில்..

இந்த சந்திப்பின் போது, மத்திய ப்ராவிடெண்ட் ஃபண்ட் ஆணையர் கே.கே.ஜலன், உடன்பாட்டு துறையின் செயல்பாட்டினை சீராய்வு செய்தார். கான்ட்ராக்ட் பணியாளர்களின் விஷயத்திலும் இணக்கத்தை சரிவர செயல்படுத்த வேண்டும் என்று அறிவுறுத்தியுள்ளார். மேலும் அவர் வர வேண்டிய பணத்தை வசூல் செய்வதே முதல் வேலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில் கள அலுவலகங்களை செயல்திட்டங்கள் தீட்ட ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

காண்ட்ராக்ட் பணியாளர்கள்

காண்ட்ராக்ட் பணியாளர்கள்

மேலும் பல துறைகளில் காண்ட்ராக்ட் மூலமாக பணியமர்த்தப்பட்டுள்ள பணியார்களுக்கை பற்றி இணைவை சரிவர சோதனை செய்ய வேண்டும் என்று ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+