ஒரிசா: பாய்லின் சூறாவளியினால் பேரழிவைச் சந்தித்த ஓடிஸா மக்களுக்கு உதவும் வகையில் ரிலையன்ஸ் நிறுவனம் இலவச தொலைபேசிச் சேவையை வழங்கி வருகிறது.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் அக்டோபர் 20 முதல் ஐந்து நாட்களுக்கு அதன் சிடிஎம்ஏ மற்றும் ஜிஎஸ்எம் வாடிக்கையாளர்களுக்கு தினமும் 10 நிமிடங்கள் இலவச ரீசார்ஜ் வழங்கி வருகிறது என அந்நிறுவனம் வெளியிட்ட செய்திகுறிப்பில் தெரிவித்துள்ளது.

பெரும்புயலினால் மாநிலத்தின் பல மாவட்டங்களில் மின்சார விநியோகம் பாதிக்கப்பட்டுள்ள இவ்வேளையில், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் வெள்ளத்தினாலும் சூறாவளியினாலும் பாதிக்கப்பட்ட பகுதிகளில் அமைந்துள்ள நிறுவனத்தின் கடைகள் மற்றும் முக்கிய சந்தைகளில் பேட்டரி சார்ஜ் மையங்கள் அமைத்து, நிவாரணம் மற்றும் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உதவி செய்யும் வழிமுறைகளை முடுக்கிவிட்டிருக்கிறது.
மாநிலத்தின் பல பகுதிகளில், மின்சார இணைப்பு இன்னும் துண்டிக்கப்பட்ட நிலையில்தான் உள்ளது.
"எங்கள் நிறுவன தொலைதொடர்பு பிணைய அமைப்பின் செயல்பாடுகள் மற்றும் இயக்கம் எவ்வித தடைகளும் இன்றி தொடரும் வகையில் எமது உடனடி முயற்சிகள் இருக்கும். இயற்கை பேரழிவுக்கு பின்னர் சில நாட்களில் தொலைதொடர்பு பிணைய இடர்பாடுகளை தடுக்கும் வகையில் சிறப்பு பேரிடர் மேலாண்மை மையங்கள் அமைக்கப்பட்டன" என ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் பிராந்திய தலைவர் ( கிழக்கு) சப்யாசசி சக்ரவர்த்தி கூறினார்.
ஒரிசா மாநிலத்தில் உள்ள பெரும்பான்மையான மொபைல் கோபுரங்கள் மாற்று ஆற்றல் மூலங்கள் வழியாக இயங்கும் திறன் கொண்டன. இந்த மாற்று ஏற்பாட்டின் மூலம் சார்ஜ் மையங்கள் அமைக்கப்பட்டுள்ளதால் இந்த பகுதிகளில் உள்ள மக்கள் தங்கள் வீடுகளில் மின்னிணைப்பு துண்டிக்கப்பட்டுள்ள நிலையிலும் தங்களுடைய தொலைபேசிகளை சார்ஜ் செய்து கொள்ள முடியும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
More From GoodReturns

ஐடி ஊழியர்களுக்கு அடுத்தடுத்து அடி!! இன்போசிஸ் நிறுவனம் பிறப்பித்த முக்கிய உத்தரவு!!

ஈரான் போர்: வேறு வழியில்லாமல்.. கச்சா எண்ணெய் உற்பத்தியை குறைத்த வளைகுடா நாடுகள்..!!

துபாய் ரியல் எஸ்டேட்: இந்தியர்கள் கதறல்.. இனி என்னவெல்லாம் நடக்குமோ..?

ஒரே ஒரு முறை முதலீடு.. வாழ்நாள் முழுக்க பென்ஷன்! LIC-யின் இந்த திட்டம் ஹிட் தான்!

இஸ்ரேலுக்கே அல்வா கொடுக்கும் ஈரான்!! இதுவும் ஒரு போர் தந்திரம் தான்!! வீடியோவால் வெளிவந்த உண்மை!!

திடீரென பறிபோன ஐடி வேலை!! அமெரிக்காவிலேயே டீக்கடை போட்டு லாபம் பார்க்கும் ஐஐடி மாணவர்!!

ஆனந்த் ஸ்ரீனிவாசன் கொடுத்த சூப்பர் ஐடியா.. தங்கம் விலையை விடுங்க.. வெள்ளி வாங்க இதுதான் சரியான வழி..!!

திடீரென மனம் மாறியதா ஈரான்? நிபந்தனையுடன் அணுசக்தி திட்டங்களை கைவிடுவதாக அறிவித்ததா?

ஈரான் போருக்கு மத்தியில் பிரம்மாஸ்திரத்தை எடுத்த அமெரிக்கா!! பேரழிவை உண்டாக்கும் Minuteman ஏவுகணை!!

அம்பானி சார் நீங்களா.. சன்டே மும்பையை ஸ்தம்பிக்க விட்ட பெங்களூர் Rameshwaram Cafe..- வீடியோ!

ஈரான் - அமெரிக்கா போர்.. நடுவில் சிக்கிக்கொண்டு தவிக்கும் ஜப்பான்.. பெரும் சீரழிவின் ஆரம்ப புள்ளி இதுதானா..?



Click it and Unblock the Notifications