சென்னை: வருமானம் ஈட்டும் காலத்தின் நடுவே இருக்கிறோம். மேலும் தற்போது பல நிறுவனங்கள் தங்கள் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. முடிவுகள் வெளியிட்டதை தொடர்நது சில நிறுவன பங்குகளின் விலை, நமக்கு ஆச்சரியங்களும், அதிர்ச்சிகளும் அளித்துள்ளது. அப்படிப்பட்ட 5 பங்குகளை பற்றி இப்போது பார்க்கலாமா?
ஏஷியன் பெய்ன்ட்ஸ் நிறுவனம் செப்டம்பர் 30-ல், இரண்டாம் காலாண்டு இறுதியில் அதன் நிகர லாபம் 327 கோடி என அறிவித்தது அனைவருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அதற்கு காரணம் அவர்களின் நிகர லாபம் 37 சதவீதமாக உயர்ந்துள்ளது. சென்ற வருடம் இதே காலகட்டத்தில் அதன் நிகர லாபம் 239 கோடியாக தான் இருந்தது. ஜெட் ஏர்வேஸ் நிறுவனமோ சந்தைக்கு எதிர்மறையான ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. ஆம், எதிர்பார்த்த இலக்கை அடையாமல், செப்டம்பர் 20-ல், இரண்டாம் காலாண்டில், அதன் நிகர லாபம் 891 கோடியாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும அதன் பங்கின் விலை சரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. லார்சென் அண்ட் டௌப்ரொ நிறுவனம் செப்டம்பர் 30-ல், இரண்டாம் காலாண்டில் நிகர லாபமாக 978 கோடியை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் அவர்கள் நிர்ணயித்த இலக்கோ 880 கோடி. மேலும் அதன் லாப கணக்கை அறிவித்தவுடன், இதன் பங்கின் விலை 10 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. யெஸ் வங்கி 371.1 கோடி நிகர லாபத்தை ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. சென்ற வருட லாபத்தை விட இந்த வருடம் 21 சதவீதத்திற்கு மேல் உயர்ந்துள்ளது. அதற்கு அதிகமான வட்டி வருமானமும் வட்டியில்லா வருமானத்தின் வளர்ச்சியுமே காரணம் ஆகும். இதன் பங்கின் விலை நிதானமாக உயர்ந்து கடைசி சில வாரங்களாக உச்சத்தில் இருந்து வருகிறது. அல்ட்ராடெக் சிமெண்ட், இரண்டாம் காலாண்டில், தன்னுடைய நிகர லாபம் 264 கோடி என அறிவித்துள்ளது. அதன் நிகர லாபம் 52 சதவீதமாக இறங்கியுள்ளது. ஆய்வாளார்கள் கணக்கிட்டதை விட குறைவான லாபத்தை தான் ஈட்டியுள்ளது. பருவ காலத்தில் சிமெண்ட்டின் தேவைப்பாடு மந்தமாக இருந்தாதாலேயே இந்த சரிவை சந்தித்துள்ளது.
ஏஷியன் பெய்ன்ட்ஸ்
ஜெட் ஏர்வேஸ்
லார்சென் அண்ட் டௌப்ரொ
யெஸ் வங்கி
அல்ட்ராடெக் சிமெண்ட்


Click it and Unblock the Notifications