டெல்லி: அனைத்து மாநிலங்களிலும், வாகனத்தின் விற்பனை விலையில் 6% லைப்டைம் வரிக் கட்டணமாக வசூலிக்க அரசு முனைகிறது என PTI அறிக்கை தெரிவித்தது. இருசக்கர வாகனம், கார் மற்றும் LMVகளுக்கு வாகனத்தின் விற்பனை விலையில் 6% வாழ்நாள்வரி கட்டணமாக வசூலிக்கப்படும் என சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் நேற்று அனைத்து மாநிலங்களுக்கும் பரிந்துரைத்துள்ளது.
"இது எல்லா மாநிலங்களுக்கும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது என்றும் இதனை இணங்கச் செய்ய முயன்று வருகின்றோம்." என போக்குவரத்து வளர்ச்சி மன்றத்தின் கூட்டம் முடிவடைந்த பின்னர் போக்குவரத்து அதிகாரி விஜய் சிப்பர் பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்தார். தற்போது எல்லா மாநிலங்களின் வரியமைப்பு வேறுபட்டு இருக்கின்றது.

"இந்த செயற்குறிப்பு குறித்து நடந்த பல கலந்தாய்வுகளின் முடிவில் ஒருசீரான வரி என்பது சாத்தியம் இல்லை எனத் தெளிவாகத் தெரிந்தது. மேலும், எந்த மாநிலங்களும் இதற்கு ஒப்புக்கொள்ளாது. அதனால், இவ்வரி அடிப்படை விலையை கொண்டு நிர்ணயம் செய்வதாக ஒப்புக்கொண்டோம்." என சிப்பர் மேலும் கூறினார்.
மக்கள் தான் பாவம்...


Click it and Unblock the Notifications