மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி கடந்த செவ்வாய்க்கிழமையன்று வெளிநாட்டில் வாழும் இந்தியர்களை ஈர்ப்பதற்காக பல புதிய சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. நம் நாட்டில் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான ஐ.சி.ஐ.சி.ஐ., திருவிழா காலத்தின் போது அதிக பண வரவை ஊக்குவிக்க உலகத்தின் அனைத்து மூலையில் உள்ள இந்தியர்களை கவரும் வண்ணம் பல சேவைகளை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

தைரோகேர் டெக்னாலஜி என்ற மருத்துவ பறிசோதனை நிறுவனத்துடன் கூட்டு சேர்ந்து, உடல் பரிசோதனைக்கு பல சிறப்பு சலுகைகளையும், தள்ளுபடிகளையும் அளிக்கிறது. வங்கி அறிமுகப்படுத்திய இத்திட்டத்தின் படி, வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் கூப்பன்களை பெற்றுக்கொள்ளலாம். அதை வைத்து 77 வகையான உடல் பரிசோதனையை அவர்களுக்கும் அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் தள்ளுபடியில் மேற்கொள்ளலாம். ரூ.5,000 ரூபாய் மதிப்பிலான பல மருத்துவ சோதனைகளை வெறும் 1,500 ரூபாய்க்கு மேற்கொள்ளலாம்.
ஐ.சி.ஐ.சி.ஐ. வங்கியின் பல கிளைகள் வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அந்நிய செலவாணி விலையிலும் சலுகை அளிக்கிறது. அதுவும் குறிப்பிட்ட காலம் வரை. இருப்பினும் இந்த பண மாற்று விலை எந்த நாட்டின் பணம் மற்றும் எவ்வளவு பணம் என்பதை பொறுத்து மாறுபடும்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு, இந்தியாவில் சொத்து வாங்க எண்ணம் இருந்தால், அதற்கு ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வீட்டு நிதி நிறுவனம் மூலமாக ஏற்பாடு செய்கிறது. சொத்து தேடுவதில் அவர்களுக்கு இது பெரிதும் உதவியாக இருக்கும். மேலும் அக்டோபர் 31 வரை கடன் அளிக்கப்பட்ட வீட்டுக் கடன்களுக்கு, விசேஷ சலுகைகளை ஏற்பாடு செய்து தருகிறது. அதன் படி, 75 லட்சம் வரையிலான கடனுக்கு செயல்படுத்தும் கட்டணமாக 5,000 ரூபாய் வசூல் செய்யப்படுகிறது. அதற்கு மேல் அளிக்கப்படும் கடனுக்கு 10,000 ரூபாயாக செயல்படுத்தும் கட்டணமாக வசூல் செய்யப்படுகிறது. இருப்பினும் 10,000 ரூபாய்க்கு குறைவான கடன் தொகைக்கு 0.5%-ஆக செயல்படுத்தும் கட்டணம் வசூல் செய்யப்படும்.
வெளிநாட்டில் வாழும் இந்தியர்களுக்கு அளிக்கப்படும் சிறப்பு சலுகையின் ஒரு பகுதியாக, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி அவர்களின் குடும்ப உறுப்பினர்களுக்கும் ஜீரோ மினிமம் பாலன்ஸ் உள்ள சேமிப்பு கணக்கை தொடங்க அனுமதி அளிக்கிறது.
"150 நாட்டில் வாழும் சுமார் 1.5 மில்லியன் இந்தியர்களை மனதில் வைத்து, மாதத்திற்கு 2 லட்சம் என்.ஆர்.ஐ. வர்த்தகம் நடைபெறும் என்ற கணக்கில் தான் இவ்வகை சலுகைகள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது." என்று வங்கியின் நிர்வாக இயக்குனர் ராஜீவ் சபர்வால் ஊடக அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

மீண்டும் Lockdown..? மீண்டும் வொர்க் ப்ரம் ஹோம்.. சர்வதேச அமைப்பு கொடுத்த வார்னிங்..!!

இந்தியாவுக்கு கிரீன் சிக்னல் கொடுத்த ஈரான்..!! 6 ஆண்டுகளில் இல்லாத முடிவினை எடுத்த மோடி அரசு..!!

தங்கம் விலை இன்று கோயம்புத்தூரில் அதிரடி ஏற்றம்..! நகைப்பிரியர்களுக்கு ஷாக்..!

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!

ஈரான் விவகாரத்தில் புதிய குண்டை தூக்கி போட்ட டிரம்ப்!! என்னென்ன சொல்றாரு பாருங்க!!



Click it and Unblock the Notifications