வாஷிங்டன்: பொருளதார நிலையற்ற தன்மையின் காரணமாக இந்தியா, அமெரிக்காவில் தனது முதலீட்டை 57 பில்லியன் டாலராக அளவு குறைத்துள்ளது. மேலும் கடந்த நான்கு மாதத்தில் இதுவே குறைந்த அளவாகும்.
டாலர் விலை ஏற்றத்தை தொடர்ந்து இந்திய அமெரிக்க மீதான முதலீட்டை குறைத்து கொண்டு வந்தது. இதனால் மே மாதம் 59.9 பில்லியன் டாலராக இருந்த முதலீடு ஜூலை மாதத்தில் 58.9 பில்லியன் டாலராக குறைத்து கொண்டது, மேலும் இந்த மாதம் 1.9 பில்லியன் டாலர் குறைத்து 57 பில்லியன் டாலர் அளவு குறைத்துள்ளது.

நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் மாதம் 55.8 பில்லியன் டாலராக இருந்த முதலீடு, மே மற்றும் ஜூன் மாதத்தில் 59.9 பில்லியன் டாலராகவும் 61.2 பில்லியன் டாலராகவும் உயர்ந்தது.
அமெரிக்க பங்குகளில் அதிகமாக முதலீடு செய்திருப்பது சீனாவே. சீனா ஜூலை மாத இறுதியில் 1.279 ட்ரில்லியன் டாலர் முதலீட்டு மதிப்பிலான பங்குகள், ஆகஸ்ட் மாதத்தில் 1.268 ட்ரில்லியன் டாலர் அளவு குறைந்துள்ளது குறிப்பிடதக்கது. சீனாவிற்கு பிறகு ஜப்பான் தான் அதிகமான அமெரிக்க பங்குகளை வைத்திருக்கிறது. அவர்கள் கிட்டத்தட்ட 1.149 ட்ரில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்திருக்கின்றனர்.
BRICS நாடுகளுக்கு மத்தியில் (பிரேசில், ரஷ்யா, இந்திய, சீனா மற்றும் தெற்கு ஆப்ரிக்கா) அமெரிக்க பங்குகளை குறைவாக வைத்திருக்கும் நாடுகளில் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளது இந்தியா. ஜப்பானுக்கு அடுத்த படியாக பிரேசில் 252.9 பில்லியன் டாலர் அமெரிக்க பங்குகளை ஆகஸ்ட் மாதம் வைத்திருந்தது. அதற்கு அடுத்து ரஷ்யா 136 பில்லியன் டாலர் மதிப்பிலான அமெரிக்க பங்குகளை வைத்திருக்கிறது.
ஆகஸ்ட் மாத கணக்கின் படி, இதில் தெற்கு ஆப்ரிக்கா தான் மிகவும் குறைவாக, வெறும் 13.2 பில்லியன் டாலர் மதிப்பிலான பங்குகளை வைத்துள்ளது. இது இந்தியா வைத்திருப்பதை விட பல மடங்கு குறைவாகும்.
அமெரிக்க அரசாங்கத்தின் இடைகால முடக்கம், கடன் தொல்லைகளால் நிறுவனங்கள் மூடல் ஆகிய பிரச்சனைகளால் தடுமாறி கொண்டிருந்த அமெரிக்க பொருளாதாரம் கடும் போராட்டத்தின் முடிவில் ஒபாம தலைமையிலான அரசு சென்ற மாதம் சீர் செய்தது நினைவிருக்கலாம்.
More From GoodReturns

ரூ.666 இருந்தால் போதும் ரூ.1 கோடி இலக்கை எட்டலாம்…!! அட இவ்வளவு ஈஸியான வழி இருக்கா?

அமெரிக்காவுக்கு சத்தமேயில்லாமல் செக் வைத்த ஈரான்: டாலர் ஆதிக்கத்தை முடக்க சீனா வகுத்த வியூகம்!

வங்கி கடனை விட ஈஸி! உங்கள் PPF பணத்தை வைத்தே கடன் பெறலாம் - புதிய விதிமுறைகள் என்ன?

முகேஷ் அம்பானிக்கு ரூ.1 லட்சம் கோடி நஷ்டம்; 2 நாட்களில் 6% சரிவடைந்த ரிலையன்ஸ் பங்கு மதிப்பு!!

EMI-யும் கட்டியாச்சு,லாபமும் பார்த்தாச்சு! ரூ8 கோடியை வைத்து ரூ10 கோடி வீட்டை வாங்கிய சாதுர்ய நபர்!

5 ஆண்டுகளில் ரூ.1 லட்சத்தை ரூ.25 லட்சமாக மாற்றிய பென்னி ஸ்டாக்: உங்க போர்ட்போலியோவுல இருக்கா?

பங்குச்சந்தை ஏறினாலும், இறங்கினாலும் கண்டுக்காதீங்க: சென்செக்ஸ் சொல்லி தரும் பாடம் இது தான்!!

டொனால்டு டிரம்ப் கொடுத்த டார்ச்சர்.. சீனா தப்பித்தது எப்படி? தடைகளை தகர்த்தெறிந்த வெற்றி பயணம்?

TCS நிறுவனத்திற்கு பெரிய கும்பிடு போட்டு வெளியேறும் ஊழியர்கள்!! என்ன நடக்குது?

கேஸ் இணைப்பே வேண்டாம் என முடிவெடுக்கும் மக்கள்: LPG பிரச்சினைக்கு மத்தியில் ஏற்பட்டுள்ள மேஜர் மாற்றம்

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?



Click it and Unblock the Notifications