ஜெட் ஏர்வேஸ்..2வது காலாண்டு முடிவில் ரூ891 கோடி நஷ்டம்!
மும்பை: ஜெட் ஏர்வேஸ் நிறுவனத்தின் 2வது காலாண்டு முடிவில் ரூ891 கோடி நஷ்டம் ஏற்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டின் 2வது மிகப் பெரிய விமான சேவை நிறுவனம் ஜெட் ஏர்வேஸ். இந்நிறுவனத்தின் 2வது காலாண்டு (ஜூலை- செப்டம்பர்) முடிவு கடந்த வியாழக்கிழமையன்று வெளியிடப்பட்டது.

அதில் நிறுவனத்தின் நஷ்டம் ரூ 891 கோடி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்பு 2011ஆம் ஆண்டு ஆண்டு ரூ713 கோடி நஷ்டத்தை எதிர்கொண்டிருந்தது.
ஜெட் ஏர்வேஸின் 2வது காலாண்டு முடிவு வெளியான உடனேயே மும்பை பங்குச் சந்தையில் அதன் பங்குகள் 6% அளவுக்கு வீழ்ச்சியை எதிர்கொண்டது. தேசிய பங்குச் சந்தையான நிஃப்டியிலும் இதே அளவு சரிவை ஜெட் ஏர்வேஸ் பங்குகள் சந்தித்தன.


Click it and Unblock the Notifications