மும்பை: ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியின் இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 20% உயர்ந்துள்ளது இதன் முக்கிய காரணம், இவ்வங்கியின் வட்டி வருவாய் குறிப்பிடதக்க அதிகரித்ததே ஆகும், என அந்நிறுவன அறிக்கை தெரிவிக்கிறது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி இந்தியாவின் இரண்டாவது பெரிய தனியார் வங்கியாகும், நடப்பு நிதியாண்டின் ஜூலை - செப்டம்பர் காலாண்டில், ரூ.2,352 கோடி ரூபாய் நிகர லாபத்தை ஈட்டியுள்ளது. அதன் சென்ற வருட நிகர லாபம் ரூ.1,956 கோடி என்பது குறிப்பிடத்தக்கது.
நிகர வட்டி வருவாய், மொத்த வருவாய் ஈன்ற வட்டியிலிருந்து கட்டிய வட்டியை கழித்தால் வருவதே நிகர வட்டி வருவாய். இது 20% உயர்ந்து ரூ.4,044 கோடி ரூபாயாக உள்ளது. மொத்த வருவாய் 7.5 சதவீதமாக உயர்ந்து ரூ.12,979 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. மொத்த செலவினங்கள் 2.4 சதவீதம் உயர்ந்து ரூ.9,092 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.

கடன் பண இழப்பீடுகளுக்கு ஈடுகட்ட ரூ.625 கோடி ரூபாயை (சென்ற வருடம் 508 கோடி ருபாய்) ஒதுக்கி வைத்துள்ளோம் என்று வங்கி தெரிவித்துள்ளது.
மொத்த NPA-க்கள்:
மொத்த முன்பணத்தில் ஒரு அங்கமாக விளங்கும் செயலாற்ற சொத்து இருப்புகள் இந்த இரண்டாம் காலாண்டில் 3.08 சதவீதமாக சரிந்துள்ளது. கடந்த ஆண்டில் இது 3.54 சதவீதமாக இருந்துள்ளது.
கட்டண வருவாய், கருவூலத் தொகை மற்றும் குத்தகை தொகை ஆகிவைகை வட்டியில்லா வருமானத்தை சேர்ந்தவைகளாகும். இவைகள் 6 சதவீதமாக உயர்ந்து 2,166 கோடி ரூபாயை எட்டியுள்ளது.
மும்பை பங்கு சந்தையில் இன்று மதியம் 1.30 மணியளவில், ஐ.சி.ஐ.சி.ஐ.யின் பங்குகள், 0.65 சதவீதம் வரை உயர்ந்து 1,028.60 ரூபாய்க்கு வர்த்தகம் செய்யப்பட்டது.


Click it and Unblock the Notifications