மும்பை: பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம், ஒரு புதிய ஆயுள் காப்பீடு திட்டத்தை தொடங்கியுள்ளது. விஷன் லைப் செக்யூர் பிளான் என்றழைக்கப்படும் இத்திட்டம் கொள்கை காலம் முழுவதும் வழக்கமான ஊக்க தொகைகளையும் 100 வயது வரை ஆயுள் காப்பீட்டு பலனையும் கலவையாக வழங்குகின்றது. மேலும் பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிறுவனம் இந்முண்ணனி முன்னணி காப்பிட்டு நிறுவனமாகும், இது அதித்யா பிர்லா குழுமத்தின் கீழ் செயல்பட்டு வருகிறது.
ஒரு சராசரி மனிதனின் வாழ்நாள் அதிகரித்து வரும் வேலையில் இக்கொள்கை முடிவில் பெரும் செலுத்தத்தக்க பலன்கள் மற்றும் 100 வயது வரையிலான கொள்கை காலம் தாண்டிய ஆயுள் காப்பு போன்றவற்றை அளிக்கின்றது. மேலும் இந்த விஷன் லைப் செக்யூர் பிளான், உங்கள் மற்றும் உங்கள் குடும்பத்திற்கு சேமிப்புகள் மற்றும் விரிவான நிதி பாதுகாப்பையும் வழங்குகின்றது என் பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் நிர்வாக இயக்குனர் மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி, ஜெயந்த் டுவா அவர்கள் தெரிவித்தார்.

விஷன் லைப் செக்யூர் பிளான் தொடக்கம் முதலே, கொள்கை காலம் மற்றும் உறுதி தொகை தேர்வு செய்வதில் இணக்கம் கொடுப்பது தவிர முதிர்வு மற்றும் இறப்பு பலன்களான வழக்கமாக பெறப்படும் ஊக்கத்தொகைகளும் டெர்மினல் ஊக்கதொகையையும் வழங்கியுள்ளது.
காப்பீட்டு நபர் கொள்கைகாலம் முடியும் வரை உயிரோடு இருந்தால், அவருக்கு முதிர்வு பலன் ஒன்று வழங்கப்படும்.
காப்பீடு நபரின் 100 வயது காலம் வரை இந்த காப்பீடு தொடரும். இதில் அந்த நபர் இறக்கநேர்ந்தாலோ அல்லது 100 வயது வரை உயிரோடு இருந்தாலோ அவர்க்கு இறப்பு பலன் ஒன்று கண்டிப்பாக வழங்கப்படும்.
இந்த திட்டமானது கொள்கை காலத்தில் ஒவ்வொரு நிதியாண்டின் முடிவில் மறுஅமைப்பு ஊக்கத்தொகை ஒன்றை வழங்குகின்றது. இது ஒவ்வொரு ஆண்டுநிறைவின் போது திட்டத்தில் சேர்க்கப்படும்.
பிர்லா சன் லைப் இன்சூரன்ஸ் என்பது ஆதித்யா பிர்லா குழுமம் மற்றும் கனடா முன்னணி சர்வதேச நிதி சேவைகள் அமைப்புக்கள் ஒன்றான சன் லைப் நிதி இன்க் நிறுவனங்களின் கூட்டு முயற்சியாகும்.


Click it and Unblock the Notifications