டெல்லி: ஐடிசி லிமிடெட் கடந்த வெள்ளியன்று, செப்டம்பர் 30 அன்று முடிவடைந்த இரண்டாம் காலாண்டின் நிகர லாபம் 21.46% உயர்ந்து 2,230.53 கோடி ரூபாயாக இருகின்றது என அறிவித்தது. இதன் காரணம் எஃப்எம்ஜிசி (FMCG) வணிகத்தின் வலுவான செயல்திறன் எனவும் அறிவித்தது.
கடந்த நிதியாண்டான 2012-13 ஆம் ஆண்டின் ஜூலை-செப்டம்பர் காலாண்டின் நிகர லாபம் 1,836.42 கோடி ரூபாயாக இருந்தது எனவும் அறிவித்தது. அதன் 2012-13 இரண்டாம் காலாண்டின் நிகர விற்பனை கடந்த ஆண்டு இருந்த 7,146 கோடியை விட 8.81 சதவிதம் உயர்ந்து 7,775.79 கோடி ரூபாயாக என ITC மும்பை பங்கு சந்தையிடம் பதிவு செய்தது.
இந்த நிறுவனத்தின் இரண்டாம் காலாண்டில் FMCG வணிகத்தில் வந்த வருவாய், கடந்த நிதியாண்டின் இரண்டாம் காலாண்டின் 5,075.95 கோடி ரூபாயை விட 12.01 % அதிகரித்து 5,686.03 கோடி ரூபாயாக இருக்கின்றது.
ஐடிசி-யின் வியாபாரம்
ஐடிசி-யின் வியாபாரம் இரண்டு வகைப்படும். ஒன்று சிகரட் இன்னொன்று மற்றவை. சிகரட் விற்பனை வருவாய் 10% உயர்ந்து 3,723.81 கோடி ரூபாயாகவும், "மற்றவை" வகையில் வருபவற்றின் வருவாய் 16.05% உயர்ந்து 1,962.22 கோடி ரூபாயாக இருந்தது.
ஐடிசி தயரிப்புகள்
FMCG வணிகத்தின் மற்றவை வகையில் பாக்கெட் உணவுகள் (பேக்கரி, பணிகாரப் பொருட்கள், ஸ்நாக்ஸ், முக்கிய உணவுகள், மசாலாப் பொருட்கள், அப்படியே சாப்பிடக்கூடும் உணவுகள்), துணிமணிகள், படிப்பு மற்றும் எழுதுப் பொருட்கள், அழகுப் பொருட்கள், தீப்பெட்டிகள் மற்றும் ஊதுவத்திகள் போன்றவை ஆகும்.
3.08 % சரிவு
FMCG வணிகப்பொருட்கள் அல்லாத மற்றவைகளான உணவகங்கள், விவசாயம், பேப்பர்பலகைகள், பேப்பர், பொதியாக்கம் ஆகியவற்றின் வருவாய் 3.08 % குறைந்து 3,198.17 கோடி ரூபாயாக இருந்தது.
செலவினம்
ஐடிசியின் இரண்டாம் காலாண்டின் மொத்த செலவினங்கள் கடந்த ஆண்டில் இருந்த 4,725.91 கோடி ரூபாயில் 3.84 % உயர்ந்து 4,907.56 கோடி ரூபாயாக இருந்தது.
பங்கு சந்தை
ஐடிசியின் பங்கின் விலை மும்பை பங்கு சந்தையில் 0.75% குறைந்து 325.50 ரூபாயாக இருக்கிறது.


Click it and Unblock the Notifications