மும்பை: ஆர்பிஐ கடந்த செவ்வாய்கிழமையன்று, வங்கி வாடிக்கையாளர்களுக்கு அனுப்பி வைக்கப்படும் ட்ரான்ஸாக்ஷன் தொடர்பான எஸ்எம்எஸ் அலெர்ட்களுக்கு, மாறாக்கட்டணத்தை நிர்ணயிப்பதற்கு பதிலாக, அவற்றின் பயன்பாட்டைப் பொறுத்து கட்டணம் விதித்து, நேர்மையாகவும், நியாயமாகவும் நடந்து கொள்ளும்படி வங்கிகளைக் கேட்டுக் கொண்டுள்ளது.

"வங்கிகளில் உபயோகப்படுத்தப்படும் தொழில்நுட்பம் மற்றும் தொலைத்தொடர்பு சேவை வழங்குவோரின் ஆற்றலை முடிந்த அளவிற்கு ஆக்கப்பூர்வமாக உபயோகித்து, எஸ்எம்எஸ் அலெர்ட்கள் போன்றவற்றின் உண்மையான பயன்பாட்டைப் பொறுத்து, அவற்றிற்கான கட்டணங்கள் வாடிக்கையாளர்களின் மீது விதிக்கப்படுகின்றனவா என்பதை உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்று வங்கிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது." என்று இந்திய ரிசர்வ் வங்கி, 2013-14 வருடத்தின் இரண்டாவது காலாண்டிற்கான அதன் பணக்கொள்கையின் மறுசீராய்வின் போது கூறியுள்ளது.
உண்மையான பயன்பாட்டின் அடிப்படையில் வங்கிகள் விதிக்கக்கூடிய கட்டணத்திற்கான நிர்ணயத்தில் நியாயமான மற்றும் நேர்மையான அணுகுமுறையை கடைபிடிக்க வேண்டியது மிகவும் அவசியம் என்றும் கூறியுள்ளது.
2011 ஆம் வருடம் மார்ச் மாதத்தின் போது, அனைத்து வகை ட்ரான்ஸாக்ஷன்களுக்கும், சம்பந்தப்பட்ட தொகை எவ்வளவாக இருப்பினும், வங்கிகள் அது தொடர்பாக வாடிக்கையாளர்களுக்கு அனுப்பக்கூடிய ஆன்லைன் அலெர்ட்களுக்கென சில வழிமுறைகளை பரிந்துரைத்துள்ளது. எனினும், இந்த அலெர்ட்களுக்கென வாடிக்கையாளர்களுக்கு விதிக்கக்கூடிய கட்டணங்களுக்கென்று எவ்வித சட்டதிட்டங்களையும் மத்திய வங்கி வரையறுக்கவில்லை.
இந்த நிதியாண்டின் துவக்கத்தில், ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா எஸ்எம்எஸ் அலெர்ட்களுக்கான வருடாந்தர கட்டணமாக 60 ரூபாயை விதித்துள்ளது. இதையே கனரா வங்கி போன்ற இதர லெண்டர்களும் பின்பற்றியுள்ளன. பஞ்சாப் தேசிய வங்கி, ஸ்டேட் பாங்க் ஆஃப் பட்டியாலா, ஐடிபிஐ மற்றும் விஜயா வங்கி போன்ற பிற பொது துறை வங்கிகளும் எஸ்எம்எஸ் அலெர்ட்களுக்கு கட்டணம் வசூலிக்க ஆரம்பித்துள்ளன.


Click it and Unblock the Notifications