என்ஆர்ஐ-க்கள் இந்தியாவில் எப்படி முதலீடு செய்வது?? 5 சூப்பரான வழிகள்!!!

பொதுவாக அயல்நாட்டில் வேலை செய்யும் இந்தியர்களுக்கு அங்கு மதிப்பும் மரியாதையும் அதிகம் என்பது நாம் அனைவரும் அறிந்ததே. மேலும் இந்தியர்கள் பல பண்நாட்டு நிறுவனங்களில் உயர்ந்த பதவியிலும், மதிப்புக்குரிய பதவியில் இருந்து சிறப்பாக செயல்படுவது நம் இந்தியாவிற்கே பெருமை தான். அதேபோல் அவர்களின் வருமானமும் அதிகம் தான். எனவே இங்கு ஒரு என்ஆர்ஐ இந்தியாவில் எந்தந்த வகையில் முதலீடு செய்யலாம் என்பதை பற்றி இங்கு விரிவாக பார்ப்போம்.

என்ஆர்ஐகள் பெரும்பாலும், தங்கள் தாய்நாட்டில் முதலீடு செய்ய விரும்பவது இயல்பு தான். மேலும் ஃபாரீன் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்களில் தங்கள் பணத்தை எப்படி முதலீடு செய்கின்றனர் என்று ஆச்சர்யப்படும் என்ஆர்ஐ-யாக இருப்பின், அயல்நாட்டில் சம்பாதித்த பணத்தை சிறப்பான முறையில் முதலீடு செய்யத்தக்கதாக பல்வேறு ஆப்ஷன்களும் உங்களுக்காக இங்கே விளக்கப்பட்டுள்ளன.

ஃபாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்

ஃபாரீன் டைரக்ட் இன்வெஸ்ட்மென்ட்

தடை விதிக்கப்பட்ட துறைகள் அல்லது செயல்கள் எதிலும் ஈடுபடாமல் ஈட்டிய பணத்தை, அயல்நாட்டு வாழ் இந்தியர் எவரும் இந்தியாவில் முதலீடு செய்யலாம். இந்த இன்வெஸ்ட்மென்ட்டின் தாத்பரியம் என்னவெனில், ஒரு நாட்டின் உற்பத்தி அல்லது வர்த்தகத் துறைகளில், பிறிதொரு நாட்டில் வாழும் ஒரு தனிநபரோ அல்லது நிறுவனமோ நேரடியாக முதலீடு செய்யலாம் என்பதே ஆகும்.

ஃபாரீன் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட்

ஃபாரீன் போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட்

போர்ட்ஃபோலியோ இன்வெஸ்ட்மென்ட் திட்டத்தின் கீழ், ஃபாரீன் இன்ஸ்டிட்யூஷனல் இன்வெஸ்டர்கள் (எஃப்ஐ ஐக்கள்), அயல்நாட்டுவாழ் இந்தியர்கள் (என்ஆர்ஐக்கள்), இந்திய வம்சாவளியைச் சேர்ந்த நபர்கள் (பிஐஓக்கள்) மற்றும் தகுதி வாய்ந்த அயல்நாட்டு முதலீட்டாளர்கள் (க்யூஎஃப்ஐக்கள்) ஆகியோர் முதலீடு செய்யலாம்.

அயல்நாட்டு முதலீட்டாளர்கள், இந்திய நிறுவனங்களின் பங்குகள் மற்றும் மாற்றக்கூடிய கடனீட்டுத் திட்டங்கள், உள்நாட்டு மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்களின் யூனிட்கள் போன்றவற்றில், இந்திய பங்குச் சந்தைகளுள் ஏதேனும் ஒன்றின் வழியாக முதலீடு செய்யலாம்.

 

 

ஃபாரீன் வென்சர் கேபிடல் இன்வெஸ்டர்கள்

ஃபாரீன் வென்சர் கேபிடல் இன்வெஸ்டர்கள்

ஃபாரீன் வென்சர் கேபிடல் இன்வெஸ்டர் (எஃப்விசிஐ) என்பது பொதுவாக வெளிநாட்டில் வாழும் ஒரு தனிநபரையோ அல்லது ஒரு என்டிட்டியையோ குறிக்கும். இவர்கள் உள்நாட்டு வென்சர்கள் மட்டுமின்றி வென்சர் கேபிடல் அண்டர்டேக்கிங்குகளிலும் (உள்நாட்டு பட்டியலில் இடம்பிடிக்காத நிறுவனம்) முதலீடு செய்யலாம்.

இதர முதலீடுகள்

இதர முதலீடுகள்

எஃப்ஐஐக்கள் மற்றும் என்ஆர்ஐக்கள் அவர்களது பணத்தை செக்யூரிட்டிகள், கருவூல பத்திரங்களில் (treasury bills), பட்டியலிடப்பட்டுள்ள மாற்றவியலாத கடனெட்டுப் பத்திரங்கள், பாண்ட்கள் மற்றும் இவை போன்ற மேலும் பல திட்டங்களிலும் முதலீடு செய்யலாம். எனினும், இந்திய ரிசர்வ் வங்கி என்ஆர்ஐ, பிஐஓ, க்யூஎஃப்ஐ, எஃப்ஐஐ ஆகியோருக்கு சில கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

நான்-ரிபாட்ரியபிள் இன்வெஸ்ட்மென்ட் (Non-Repatriable)

நான்-ரிபாட்ரியபிள் இன்வெஸ்ட்மென்ட் (Non-Repatriable)

ஒரு என்ஆர்ஐ அல்லது பிஐஓ, என்ஆர்ஓ சேமிப்பு வங்கிக் கணக்கு ஒன்றை வைத்திருக்கும் பட்சத்தில், அவர்கள் பங்குகளை ரூபாயில் வாங்கலாம். நான்-ரிபாட்ரியபிள் இன்வெஸ்ட்மென்ட்களில் டேல்ஸ் ஃபண்ட் (Dales fund), என்ஆர்ஓ கணக்குக்கே கிரெடிட் செய்யப்படுகிறது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+