ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் தலைகீழாக மாறியது!!

ஸ்டேட் வங்கியின் வட்டி விகிதம் தலைகீழாக மாறியது!!
சென்னை: இந்தியாவின் மிகப்பெரிய பொது துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, 1 கோடிக்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கு வட்டி வகிதத்தை அதிகரித்துள்ள, அதே நேரத்தில் 1 கோடிக்கும் அதிகமான நிலையான வைப்புத் நிதியின் வட்டி விகிதத்தை குறைத்துள்ளது.

இந்திய ரிசர்வ் வங்கி ரெப்போ விகிதத்தை 0.25 சதவீதம் உயர்த்தி அதனை 7.75% ஆக உயர்த்தி உள்ளது, மேலும் குறுகிய-கால நிதிக்கான விகிதத்தை 8.75% ஆக குறைத்த பின்னர், இத்தகைய நடவடிக்கையை பாரத ஸ்டேட் வங்கி எடுத்துள்ளது.

180 முதல் 210 நாட்கள் முதிரவு காலம் கொண்ட, 1 கோடிக்கும் குறைவான குறுகிய கால வைப்புநிதிகளுக்கு, எஸ்பிஐ இப்பொழுது 7% வட்டி வழங்குவதாகவும் அல்லது முன்பு வழங்கப் பட்டதை விட 20 அடிப்பைடை புள்ளிகள் அதிகமாக வழங்குவதாகவும் குறிப்பிட்டுள்ளது.

எனினும், இந்த வங்கி 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளின் வட்டி விகிதத்தை 0.25% குறைத்து, 2 சதவிதம் வட்டி வழங்குகிறது. 1 கோடிக்கும் அதிகமான வைப்பு நிதிகளை பல்க்கு டெப்பாசிட் என்று அழைக்கப்படும்.

7 முதல் 60 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட நிதிகளுக்கு, அதிகபட்சமாக 2% வட்டி வகிதம் குறைக்கப்பட்டுள்ளதால், அவற்றின் வட்டி வகிதம் 6.5 சதவீதமாக இருக்கிறது.

SBI -ல் ஜுன் மாத இறுதியில் இருந்த தொடர் வைப்பு நிதியின் மதிப்பு ரூ.6,53,629 கோடியாக இருந்தது. இதில், சில்லறை தொடர் வைப்பு நிதியின் அளவு ரூ.4,93,977 கோடி ஆகும்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+