வோடபோனின் சூப்பர் டேட்டா பாக்!! அசத்தலான ஆப்பர்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் இரண்டாவது மிகப்பெரிய தொலைத்தொடர்பு ஆப்பரேட்டரான வோடபோன் இந்தியா, அதன் மொபைல் இன்டர்நெட் கட்டண விகிதங்களை நாடு முழுவதும் 80% குறைத்துள்ளது. பதிவிறக்கம் (டவுண்லோட்) செய்வதற்கான இதன் முந்தைய கட்டணம் ஒரு KB-க்கு 10 பைசாவாக இருந்தது. இப்பொழுது ஒரு KB-க்கு 2 பைசாவாக குறைக்கப்பட்டுள்ளது என இந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

இது 2ஜி மற்றும் 3ஜி தரவு பயன்பாடுகளுக்கு பொதுவானதாகும், இந்த கட்டண விகிதங்கள், ப்ரீ-பெயிட் மற்றும் போஸ்ட் பெயிட் வாடிக்கையாளர் இருவருக்கும் பொருந்தும்.

2ஜி வாடிக்கையாளர்கள்

2ஜி வாடிக்கையாளர்கள்

"2ஜி பயன்படுத்தும் வாடிக்கையாளருக்கான இந்த 80% மொபைல் இன்டர்நெட் கட்டணகுறைப்பு, நமது மொபைல் இன்டர்நெட் இயக்க உத்தியில் ஒரு முக்கிய செயல்பாடாகும், மேலும் இந்த முயற்சி வாடிக்கையாளர்களைக் கவர்ந்து, அதிக பயன்பாடிற்கு வழிவகுக்கும்" என வோடபோன் இந்தியா நிறுவனத்தின் உயர் வர்த்தக நிர்வாகி விவேக் மாத்துர் கூறினார்.

ரிலையன்ஸ் கமினிகேஷன்ஸ்

ரிலையன்ஸ் கமினிகேஷன்ஸ்

2ஜி தரவு கட்டணத்துக்கு ஈடாக 3ஜி தரவு கட்டணங்களை முதன்முறையாக ரிலையன்ஸ் கமினிகேஷன்ஸ் நிறுவனம் கடந்த ஜூலையில் அறிமுகப்படுத்தியது, இதை அமுல்படுத்திய இரண்டாவது நிறுவனம் வோடபோன்.

ஒரு KB 1.2 பைசா தான்

ஒரு KB 1.2 பைசா தான்

2ஜி விகிதங்களை விட 3ஜி மலிவாக கிடைக்கிறது, 1GB 3ஜி தரவு டவுட்லோட் ரூ.123 க்கு கிடைக்கிறது, இது கிட்டத்தட்ட KB-க்கு 1.2 பைசா தான் ஆகும். என இரட்டை-தொழிநுட்ப ஆப்பரேட்டரான வோடபோன் நிறுவனம் தெரிவிதுள்ளது.

தீபாவளி சலுகை!!

தீபாவளி சலுகை!!

ஜூன் நடுப்பகுதியில், கர்நாடகா, உத்தரபிரதேசம்(மேற்கு) மற்றும் மத்திய பிரதேசம் ஆகிய மூன்று வட்டாரங்கள் மற்றும் சட்டீஸ்கர் ஆகிய இடங்களில் ஒரு வெற்றிகரமான துவக்கத்துக்கு பின்னர், சமீபத்தில் தீபாவளி செல்வசெழிப்பு விகிதங்களை இந்தியா முழுவதும் கொண்டுவந்துள்ளது என வோடபோன் கூறியது.

41.2 மில்லியன் வாடிக்கையாளர்கள்

41.2 மில்லியன் வாடிக்கையாளர்கள்

வாடிக்கையாளர்கள் நாட்டின் எந்த பகுதியில் ரோமிங்கில் இருந்தாலும் கூட, அவர்கள் ஹோம் சர்க்களில் என்ன விகிதம் செலுத்துகிறார்களோ அதே கட்டணமே செலுத்த வேண்டியிருக்கும். நாடு முழுவதும் வோடபோனிற்கு 41.2 மில்லியன் டேட்டா சப்ஸ்கிரைப்பர்கள் உள்ளனர்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Vodafone slashes data rates by 80%

India's second largest telecom operator, Vodafone India today said that it slashed its mobile internet rates by 80%, across the country.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X