சென்னை: அனைத்து வங்கிகளும் தங்களது காலாண்டு முடிவுகளை வெளியிட்டு வருகிறது. வங்கிகளின் முடிவுகளை ஒப்பிட்டு பார்க்கும் பொழுது பொதுத்துறை வங்கிகளின் முதல் தொகுதி வருவாய் கனிசமாக அதிகரித்துள்ளது. அதிலும் முக்கியமாக மோசமான சொத்துக்கள் (Bad Asset) பிரிவை சார்ந்த வருவாய், செப்டம்பர் காலாண்டின் போது, சந்தை எதிர்பார்ப்புகளை விட பொது துறை வங்கிகள் சிறப்பாக செயல்பட்டுள்ளது.
பொதுத்துறை வங்கிகளுள், இது வரை பாங்க் ஆஃப் பரோடா, யூனியன் வங்கி, அலஹாபாத் வங்கி மற்றும் சிண்டிகேட் வங்கி ஆகியவை தங்களின் காலாண்டு வருவாயை அறிவித்துள்ளன.
பாங்க் ஆஃப் இந்தியா
கடந்த ஆண்டின் போது சுமார் 302 கோடி ரூபாயாக இருந்த பாங்க் ஆஃப் இந்தியாவின் நிகர லாபம், இவ்வருட செப்டம்பர் காலாண்டின் போது சுமார் 105 சதவீதம் வரை உயர்ந்து சுமார் 622 கோடி ரூபாயை எட்டி,
நிகர வட்டி வருமானம் சுமார் 2,527 கோடி ரூபாய் அளவுக்கு மேம்படுத்தப்பட்டுள்ளது. கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தின் போது இருந்த சுமார் 2,196 கோடி ரூபாய் வருமானத்தோடு ஒப்பிடுகையில் இது சுமார் 15.07 சதவீத அளவு வளர்ச்சியடைந்து இந்நிலையை எட்டியுள்ளது.
அலகாபாத் வங்கி
கொல்கத்தாவைச் சேர்ந்த அலகாபாத் வங்கி சுமார் 275.81 கோடி ரூபாயை நிகர லாபமாகக் கொண்டு, கடந்த ஆண்டு இருந்த 234.20 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் சுமார் 17.7 சதவீத உயர்வை அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இவ்வங்கியின் பங்குகள் 2.3 சதவீதம் என்ற வீதத்தில் சுமார் 93.85 ரூபாயில் முடிவடைந்துள்ளன.
இந்த காலாண்டின் போது இதன் நிகர வட்டி வருவாய் சுமார் 1,309 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது. இது கடந்த ஆண்டில் 1,174 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
சிண்டிகேட் வங்கி
சிண்டிகேட் வங்கியும், சுமார் 1.4 சதவீத மார்ஜினல் உயர்வுடன் கூடிய நிகர லாபமாக சுமார் 470.12 கோடி ரூபாயை அறிவித்துள்ளது. இது கடந்த ஆண்டின் போது, சுமார் 463.37 கோடி ரூபாயாக இருந்துள்ளது.
பாங்க் ஆஃப் பரோடா
பாங்க் ஆஃப் பரோடா ஊழியர்களுக்கான செலவு மற்றும் கருவூல இழப்புகளுக்கு அதிகமான ஒதுக்கீடுகள் செய்யப்பட்டதனால், அதன் நிகர லாபம் கடந்த ஆண்டு இருந்த 1,301.39 கோடி ரூபாயுடன் ஒப்பிடுகையில் சுமார் 10.2 சதவீதம் வரை சரிந்து 1,168.1 கோடி ரூபாயாக இறங்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இருந்தாலும் இதுவும் சந்தை எதிர்பார்ப்பைக் காட்டிலும் உயர்வானதாகவே இருந்துள்ளது.
More From GoodReturns

RBI அதிரடி நடவடிக்கை.. இனி பார்த்துக்கொண்டு சும்மா இருக்க முடியாது..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

மாருதி சுசூகி கார் வைத்திருப்பவர்களுக்கு ஜாக்பாட்.. வந்தது Quickstop சேவை.. பட்டுபட்டுன்னு வேலை முடியும்..!

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

கேஸ் சிலிண்டர் பயனர்களுக்கு எச்சரிக்கை! இனி நினைத்த நேரத்தில் புக் செய்ய முடியாது?

முகேஷ் அம்பானியின் ரிலையன்ஸ் ஜியோவுக்கு செக் வைத்த TRAI: ஏப்ரல் 14ஆம் தேதி வரை கெடு என அறிவிப்பு..!!

FASTag விதிகளில் மாற்றம்: புதிதாக கொண்டு வரப்பட்ட 72 மணி நேர விதி..!! வாகன ஓட்டிகளே உஷார்..!!

உங்க வீட்டுக் கடனையும் விட்டு வைக்காத ஈரான் போர்.. அடுத்த வாரம் பெரிய அறிவிப்பு வரப் போகுது!!

தங்கம் விலை ரூ.2 லட்சத்தை நெருங்குமா?பீட்டர் ஷிஃப் கொடுத்த மெகா வார்னிங்! ஏப்ரலில் எகிற போகுது?



Click it and Unblock the Notifications