சென்னை: சிமெண்ட் உற்பத்தியில் முதன்மை நிறுவனமாக விழங்கும் இந்தியா சிமெண்ட்ஸ் நிறுவனம் தனது இரண்டாம் காலாலண்டு முடிவுகளை இன்று வெளியிட்டது. மேலும் இந்நிறுவனம் சென்னையை தலைமை இடமாக கொண்டு செயல்படுகிறது.
இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் சுமார் ரூ.22.53 கோடி ரூபாய் நஷ்டம் அடைந்துள்ளது, இதே காலாண்டில் கடந்த வருடம் ரூ.49.08 கோடி லாபம் அடைந்தது குறிப்பிடதக்கது.
இந்நிறுவனம் கடந்த நிதியாண்டில் சிறப்பாக செயல்பட்டதால், 2012ஆம் ஆண்டின் முடிவில் அதன் மொத்த லாபம் ரூ.163.55 கோடியாக. குறிப்பிட்ட சில காரணங்களால் இந்நிறுவனம் இத்தகையை சரிவை சந்தித்துள்ளது என அந்நிறுவத்தின் மூத்த அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.

மொத்த வருவாய்
இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ.1,125.68 கோடியில் இருந்து ரூ.1,093.78 கோடி என்று சரிந்துள்ளது.
செயல்பாடுகளின் மொத்த வருமானம்
நடப்பு நிதியாண்டில் அரையாண்டின் செயல்பாட்டின் மொத்த வருவாய் 2334.50 கோடியாகும். இந்த ஆண்டின் முடிவில் செயல்பாட்டின் மொத்த வருவாய் வருவாய் ரூ.4,613.62கோடி எட்டும் என அந்நிறுவனம் தெரிவித்தது.
நிறுவன பங்கின் நிலை
அந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.54.55 ரூபாயாகும். இது நேற்றை விட 2.33 சதவிதம் குறைவாகும்.


Click it and Unblock the Notifications