டெல்லி: இந்திய ரிசர்வ் வங்கி இன்று வெளியிட்ட அறிக்கையில் வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு விரைவாக டிடிஎஸ் சான்றிதழை வழங்க முறைப்படுத்துமாறு அறிவுறுத்தியுள்ளது.
சில வங்கிகள் அதன் வாடிக்கையாளர்களுக்கு முறையாக 16A படிவத்தில் டிடிஎஸ் சான்றிதழை வழங்காததால், மக்களால் சரியான நேரத்தில் வருமான வரி ரிட்டனை தாக்கல் செய்ய முடியாத நிலையில் உள்ளனர். இதனை கருத்தில் கொண்டு ரிசர்வ் வங்கி இத்தகையை அறிக்கையை வெளியிட்டுள்ளது.

மேலும் ஆர்பிஐ "இத்தகைய சூழ்நிலையை கருத்தில் கொண்டும், வைப்புத் தொகையாளர்கள் நலனை பாதுகாக்கவும், மேம்பட்ட வங்கி சேவையை வாடிக்கையாளர்களுக்கு அளிக்கவும் இந்த செயல் முறை உதவும்" என தெரிவித்தது.
அனைத்து வங்கிகளும் ஒரு புதிய செயல் முறையை திட்டத்தினை உருவாக்குவதன் முலம் வாடிக்கையாளர்களுக்கு மிகவும் குறைந்த நேரத்தில் வருமான வரி சட்டத்தின் கீழ் 16A படிவத்தை வழங்க வேண்டும் என்று ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
இதுமட்டும் அல்லாமல் வங்கிகள் வருமான வரி தாக்கல் செய்யும் கடைசி நாள் வரை 16A படிவத்தை வழங்க காத்திருக்க கூடாது என ரிசர்வ் வங்கி கூறியுள்ளது.


Click it and Unblock the Notifications