2ஆம் காலாண்டு முடிவில் டிஎல்எஃப் நிறுவன நிகர லாபம்.. ரூ.100 கோடி!!

டெல்லி: ரியல் எஸ்டேட் துறையில் இந்தியாவின் முதன்மை நிறுவனமாக விளங்கும் டிஎல்எஃப் நிறுவனம் தனது 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனத்தின் 2ஆம் காலாண்டு முடிவில் மொத்த லாபம் ரூ.100.05 ரூபாயை எட்டியுள்ளது. இது கடந்த ஆண்டின் இதே காலாண்டை ஒப்பிடுகையில் 45 சதவீதம் குறைவாகும்.

நடப்பு காலாண்டில்ஸ இந்நிறுவனத்தின் மொத்த வருமானம் 2,225 கோடி ரூபாயாகும், இது கடந்த ஆண்டை விட 9 சதவிதம் குறைவாகும். இந்நிறுவனம் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் சுமார் 2,453 கோடி எட்டியிருந்தது குறிப்பிடதக்கது.

2ஆம் காலாண்டு முடிவில் டிஎல்எஃப் நிறுவன நிகர லாபம்.. ரூ.100 கோடி!!

ட்எல்எஃப் நிறுவனம் குர்கானில் ஒரு ஆடம்பர அடுக்கு மாடி கட்டிடத்தை கட்டிவருகிறது. இந்த கட்டிடத்தை கட்டுமானத்திற்காக எல்&டி நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்துள்ளது. மேலும் இந்த கட்டிடத்தின் விற்பனை 2ஆம் காலாண்டின் முடிவில் துவக்கப்பட்டதால் நிறுவனத்தின் லாபம் சற்று அதிகரித்துள்ளதாக டிஎலஎஃப் தெரிவித்தது.

மேலும் இந்த ஆடம்பர அடுக்கு மாடி கட்டிடத்திற்கு தி கிரஸ்ட் மற்றும் லெய்டன் வேல்ஸ்பன் என பெயரிடப்பட்டுள்ளது. இந்த கட்டிடத்தின் ஒரு சதுர அடி ரூ.28,055 ரூபாயகும்.

டிஎல்எஃப் நிறுவனத்தின் நிதி நெருக்கடியால், சில நிறுவனத்தின் மீதான முதலீட்டை டிஎலஎஃப் நிறுவனம் முடக்கியுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+