ஜேஎஸ்டபிள்யூ நிறுவன ஸ்டீல் உற்பத்தி 9% அதிகரிப்பு!!! கவலையில் டாடா ஸ்டீல்..

டெல்லி: ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறுவனம் கடந்த வெள்ளிகிழமை வெளியிட்ட அறிக்கையில், அக்டோபர் மாதம் மட்டும் இந்நிறுவனம் சுமார் 10.62 லட்சம் டன் ஸ்டீலை உற்பத்தி செய்துள்ளதாக தெரிவித்தது. இது கடந்த ஆண்டை விட 9 சதவீதம் அதிகமாகும்.

மேலும் இந்நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி சஜ்ஜன் ஜின்தால் கூறுகையில் "இந்நிறுவனம் ஆக்டோபர் மாதம் மட்டும் சுமார் 9.71 லட்ச டன் உற்பத்தி செய்யப்பட்டது. மேலும் ஜேஎஸ்டபிள்யூ ஈஸ்பட் ஸ்டீல் நிறுவனத்தின் உற்பத்தியும் ஜேஎஸ்டபிள்யூ ஸ்டீல் நிறவனத்துடன் இணைக்கப்பட்டதால் உற்பத்தி அளவு அதிகரித்துள்ளது" என அவர் தெரிவித்தார்.

மேலும் இந்த அறிக்கையில் தட்டை வடிவ ஸ்டீலின் உற்பத்தி 36 சதவீதம் அதிகரித்து 8.67 டன் ஸ்டீல் அளவை எட்டியது, அதற்கு மாறாக நீளமான ஸ்டீல் உற்பத்தியில் 10 சதவீதம் சரிவு எற்பட்டது.

ஜேஎஸ்டபிள்யூ நிறுவன ஸ்டீல் உற்பத்தி 9% அதிகரிப்பு!!! கவலையில் டாடா ஸ்டீல்..

இந்த தட்டை வடிவ ஸ்டீலை ஆட்டோமொபைல் மற்றும் நுகர்வோர் துறைகளில்அதிகளவில் பயன்படுத்தப்படும், நீளமான ஸ்டீல் கம்பிகளை கட்டுமானத்திற்கு பயன்படுத்தப்பதும்.

2012-13 ஆம் நிதியாண்டில் கர்நாடகாத்தில் எற்பட்ட இரும்பு தாது பிரச்சினையால் 8.52 மில்லியன் டன் அளவு ஸ்டீல் மட்டுமே உற்பத்தி செய்யப்பட்டது என அந்நிறுவனம் தெரிவித்தது.

மேலும் மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவனத்தின் ஒரு பங்கின் விலை ரூ.866 ரூபாயாகும்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+