மும்பை: ரிசர்வ் வங்கி அக்டோபர் மாத இறுதியில் எம்எஸ்எஃப் விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகள் குறைத்ததை அடுத்து வங்கிகள் ரிசர்வ் வங்கியிடம் இருந்து கடன் பெற முனைந்தது நாம் அனைவரும் அறிந்ததே.
எனவே ரிசர்வ் வங்கி இக்கடன் அளிக்கிக்கும் திட்டத்தை இம்மாதம் துவங்கியது. நவம்பர் 8ஆம் தேதியன்று மட்டும் வங்கிகள் சுமார் ரூ.19,400 கோடி ரூபாயை ரிசர்வ் வங்கியிடம் கடன் பெற்றது. இத்தொகை இம்மாதம் நவம்பர் 7ஆம் தேதி பெற்றதை விட ரூ.7,135 கோடி அதிகமாகும்

இந்திய ரிசர்வ் வங்கி கடந்த அக்டோபர் 29ஆம் தேதியன்று திருத்தப்பட்ட நிதியியல் கொள்கை வெளியிட்டது. இதில் ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன் வட்டி விகிதத்தில் (எம்எஸ்எஃப்) 25 அடிப்படை புள்ளிகளை குறைத்து 8.75 சதவிதம் என்று அறிவித்தது. நடப்பு நிதியாண்டில் ஜூலை மாதத்தில் மத்தியில் எம்எஸ்எஃப் விகிதத்தை 200 உயர்த்தியது குறிப்பிடதக்கது.
பொதுவாக ரிசர்வ் வங்கி, நாட்டில் கடுமையான பண இறுக்கம் நிலவும் போது எம்எஸ்எஃப் விகிதத்தை குறைக்கும்.


Click it and Unblock the Notifications