சென்னை: மொபைல் உலகில் கொடி கட்டி பறந்த மோட்டோரோலா நிறுவனம் கடந்த சில வருடங்களாக விற்பனை, உற்பத்தி போன்றவற்றில் கடும் சரிவை சந்தித்து வந்தது. இதனால் இந்நிறுவனத்தை கூகிள் நிறுவனம் சில வருடங்களுக்கு முன்பு கைபற்றியது.
இந்த இரு நிறுவனங்களும் இணைந்து சந்தையை மீண்டும் கைபிடிக்க குறைந்த விலை மொபைல் போனை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த புதிய போன் மோட்டோ எக்ஸ் மாடல் வகையை சேர்ந்தவையாகும்.
இந்த போனை அறிமுகப்படுத்துவதன் மூலம் சந்தை கைப்பற்ற முடியும் என அந்நிறுவனம் கூறியது என வால் ஸ்ட்ரீட் பத்திரிக்கை தெரிவித்தது.

இந்த புதிய போனின் விலை 160 பவுன்டு என பிரிட்டன் நாட்டின் அமேசான் வலைதளத்தில் குறிப்பிட்டதை தொடர்ந்து, அமெரிக்காவில் இதன் விலை இன்னும் குறைவாக தான் இருக்கும் என மக்களிடையே கருத்து நிலவி வருகிறது.
புதன்கிழமை அன்று மோட்டோரோலா நிறுவனத்தின் மோட்டோ ஜி வகை போனை பிரேசிலில் நடைபெற உள்ள சர்வதேச விழா ஒன்றில் அந்நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது.


Click it and Unblock the Notifications