ஹனிவெல் நிறுவனத்தின் புதிய தலைவர் அனந்த் மகேஷ்வரி!! இது திறமைக்கான அங்கீகாரம்..

மும்பை: 2010 மார்ச் மாதம் முதல் ஹனிவெல் ஆட்டொமேஷன் இந்தியா லிமிட்டெட்டின் (ஹெச்ஏஐஎல்) நிர்வாக இயக்குனராக பணியாற்றி வரும் திரு.மகேஷ்வரி, ஹனிவெல் இந்தியாவின் தற்போதைய பிரசிடென்ட் ஆக விளங்கும் புஜோல்ட் அவர்களுக்கு பதிலாக பதிவியேற்பார் என்று இந்நிறுவனம் ஒரு வெளியீட்டில் குறிப்பிட்டுள்ளது.

ஹனிவெல் நிறுவனம், தன் தென்கிழக்காசிய பிரசிடென்ட் ஆக திரு.ஜிம் புஜோல்ட் அவர்களும், ஹனிவெல் இந்தியாவின் பிரசிடென்ட் ஆக திரு.அனந்த் மகேஷ்வரி அவர்களும் நியமனம் செய்யப்பட்டிருப்பதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

புஜோல்ட் மற்றும் அனந்த் ஆகிய இருவரும் 2014 ஜனவரி 1 ஆம் தேதி முதல் தங்கள் புதுப் பதவிகளில் பணியாற்றுவார்கள்.

ஃபார்ச்சூன் நிறுவனம்

ஃபார்ச்சூன் நிறுவனம்

ஃபார்ச்சூன் 100 நிறுவனங்களுள் ஒன்றான ஹனிவெல், குளோபல் மெய்க்ரோ டிரெண்ட்ஸுடன் தொடர்புடையதான, உலகின் மிகக் கடினமான சில சவால்களாகக் கருதப்படும் எனர்ஜி எஃபிஷியன்ஸி, க்ளீன் எனர்ஜி ஜெனரேஷன், சேஃப்டி அண்ட் செக்யூரிட்டி, குளோபலைசேஷன் மற்றும் கஸ்டமர் புரொடக்டிவிட்டி ஆகியவற்றை கையாளக்கூடிய தொழில்நுட்பங்களை உற்பத்தி செய்து வருகிறது.

முக்கிய வர்த்தக துறைகள்

முக்கிய வர்த்தக துறைகள்

இந்நிறுவனத்தின் நான்கு வகை வர்த்தகங்கள் - ஏரோஸ்பேஸ், பெர்ஃபார்மன்ஸ் மெட்டீரியல்ஸ், ஆட்டோமேஷன் அண்ட் கன்ட்ரோல் சொல்யூஷன்ஸ், மற்றும் டெக்னாலஜீஸ் அண்டு ட்ரான்ஸ்போர்டேஷன் சிஸ்டம்ஸ் - ஒவ்வொன்றும், இந்தியாவில் குறிப்பிடத்தகுந்த செயல்பாட்டுடன்காணப்படுகின்றன.

திறமைக்கான அங்கீகாரம்

திறமைக்கான அங்கீகாரம்

"இந்த உயர்மட்ட தலைமை மாறுதல்கள், திறமை உள்ளவர்களுக்கான அங்கீகாரத்தை பிரதிபலிப்பதோடல்லாமல் எங்கள் நிறுவனத்தின் ஹை குரோத் ரீஜியன்களில் (ஹெச்ஜிஆர்-கள்), இணையற்ற வளர்ச்சியை எட்டும் நோக்கிலான தளராத முயற்சியையும் எடுத்துக் காட்டுவதாகத் திகழ்கிறது," என்று ஹனிவெல் நிறுவனத்தின் குளோபல் ஹை குரோத் ரீஜியன்ஸின் பிரெசிடென்ட் ஆன திரு.ஷானே டெட்ஜராத்தி கூறியுள்ளார்.

புஜோல்ட், தென்கிழக்காசிய பிரெசிடென்ட்

புஜோல்ட், தென்கிழக்காசிய பிரெசிடென்ட்

திரு.புஜோல்ட், ஹனிவெல்லின் தென்கிழக்காசிய பிரெசிடென்ட் ஆக பதவியேற்ற பின், சிங்கப்பூர், மலேஷியா, தாய்லாந்து மற்றும் ஃபிலிப்பைன்ஸ் நாடுகளில் இருக்கக்கூடிய நிறுவன செயல்பாடுகளைப் பார்த்துக் கொள்ளவிருக்கிறார்.

அனந்த் மகேஷ்வரி

அனந்த் மகேஷ்வரி

திரு.மகேஷ்வரி பத்து வருடங்களுக்கும் மேலாக ஹனிவெல் நிறுவனத்தின் பல்வேறு தலைமைப் பொறுப்புகளில் திறம்பட செயலாற்றியுள்ளார்.

ஹனிவெல்லின் எதிர்காலம்

ஹனிவெல்லின் எதிர்காலம்

இவர்கள் இருவரும் ஹனிவெல்லின் வர்த்தகங்களில் பங்கு கொண்டு, புதிய வளர்ச்சி வாய்ப்புகளை உருவாக்குவதற்கும், தத்தம் பகுதிகளில் இருக்கக்கூடிய திறமையான ஒருங்கியக்கத்தை கண்டுகொள்வதற்கும் பாடுபடுவர்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+