பெங்களூரு: இந்தியா என்றாலே இப்பொழுது மென்பொருள் ஏற்றுமதி செய்யும் நாடு என்றாகிவிட்டது. இது ஒரு பக்கம் உண்மை என்றாலும் ஐடி துறை தற்போது சரியான வளர்ச்சி பாதையில் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்தியா மென்பொருள் துறையில் முன்னணி நிறுவனமாக விளங்கும் விப்ரோ லிமிட்டெட், தனது உயர் மட்ட ஊழியர்களை மகிழ்விக்கும் வகையில் வரையறுக்கப்பட்ட ஸ்டாக் யூனிட் திட்டம் 2005 மற்றும் வரையறுக்கப்பட்ட ஸ்டாக் யூனிட் திட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் அந்நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்கள் தங்கள் பங்கு வாய்ப்புகளை செயல்முறைப்படுத்தியதைத் தொடர்ந்து, கடந்த வெள்ளியன்று தலா 2 ரூபாய் பெறுமானமுள்ள சுமார் 30,257 ஈக்விட்டி பங்குகளை அந்நிறுவன ஊழியர்களுக்கு ஒதுக்கீடு செய்துள்ளது.

"நிறுவனத்தின் இயக்குனர் குழுமத்தைச் சேர்ந்த நிர்வாகக் குழுவினால் சரிபார்க்கப்பட்டு, நவம்பர் 07 ஆம் தேதி முதல் நடைமுறைப்படுத்தப்பட்ட சர்க்குலர் ரெசொல்யூஷன் படி, வரையறுக்கப்பட்ட ஸ்டாக் யூனிட் திட்டம் 2005 மற்றும் வரையறுக்கப்பட்ட ஸ்டாக் யூனிட் திட்டம் 2007 ஆகியவற்றின் கீழ் அந்நிறுவனத்தின் தகுதி வாய்ந்த ஊழியர்கள் தங்கள் பங்கு வாய்ப்புகளை செயல்முறைப்படுத்தியதை அனுசரிக்கும் வண்ணம், தலா 2 ரூபாய் பெறுமானமுள்ள சுமார் 30,257 ஈக்விட்டி பங்குகளை ஒதுக்கீடு செய்து, அவற்றை வழங்கிட வழி வகுத்துள்ளது." என்று விப்ரோ லிமிட்டெட் பாம்பே பங்குச் சந்தையில் (பிஎஸ்இ) சமர்ப்பிக்கப்பட்ட ஒரு ஆவணத்தில் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications