இந்தியாவின் ஏற்றுமதி 325 பில்லியன் டாலர் இலக்கை கண்டிப்பாக எட்டி பிடிக்கும்!!

மும்பை: இந்திய பொருளாதாரத்திற்கு ஒரு நல்ல செய்தி. இந்திய ஏற்றுமதி கடந்த நான்கு மாதங்களாக இரட்டை இலக்கத்தில் உயர்ந்து வருகிறது. மேலும் வர்த்கத கணிப்புகளின் படி நடப்பு கணக்கு பற்றாக்குறையானது 70 பில்லியன் டாலருக்குள் தடுக்கப்பட்டு வருவதால், வணிக பற்றாக்குறை உயர்வைு நிலையை அடைந்துள்ளது.

இந்த மாதம் மட்டும் ஏற்றுமதி 14 சதவிதம் உயர்ந்திருக்கிறது. ஏற்றுமதி கடந்த 3 மாதங்களாகவே இரட்டை இலக்கத்தில் உயர்ந்து வருவதற்கு குறைந்த அடிப்படை மதிப்பீடும் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே, இங்கே இநதியாவின் ஏற்றுமதியை வளரச் செய்யும் காரணிகளை மேற்கொண்டு பார்ப்போம்.

இந்தியாவின் ஏற்றுமதி 325 பில்லியன் டாலர் இலக்கை கண்டிப்பாக எட்டி பிடிக்கும்!!

சந்தைகளின் முன்னேற்றம்

இந்திய ஏற்றுமதி நிறுவன கூட்டமைப்பின் (FIEO) தலைவரான ரஃபீக் அகமது கூறுகையில், "அமெரிக்கா மற்றும் ஐரோப்பா வர்த்தக நிலைமை மேம்பட்டு வருகிறது, மேலும் இதில் இங்கிலாந்து மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ளது. இதனால் முதலீட்டாளர்களிடத்தில் நம்பிக்கை அதிகரித்துள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார். இந்தியாவின் ஒட்டுமொத்த ஏற்றுமதியில் 30% அமெரிக்க மற்றும் ஐரோப்பிய சந்தைகளை சார்ந்துள்ளது. ஆனால் தெற்கு மற்றும் இலத்தீன் அமெரிக்காவில் வளர்ச்சிக்கு வலுவான தடை ஏற்பட்டுள்ளது.

ரூபாயின் மதிப்பு குறைந்திருத்தல்

கடந்த ஆகஸ்ட் மாதம் டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு வரலாற்றிலேயே மிகவும் குறைவான அளவான ரூ.68.85 ஆக குறைந்த பின்னர், ஏற்றுமதி சுமார் 8% முன்னேறியது.

இந்தியாவின் ஏற்றுமதி 325 பில்லியன் டாலர் இலக்கை கண்டிப்பாக எட்டி பிடிக்கும்!!

வங்காளம், சீனா ஆர்டர்கள்

சீன நாணயமான யென்னின் மதிப்பு உயர்ந்து வருவதால், சீனாவில் பணியாட்களுக்கான செலவினங்கள் உயர்கிறது, பங்களாதேஷில் செப்டம்பர் 2013-ல் நிகழ்ந்த தொழிலாளர்கள் எதிரான எதிர்ப்புகளால் ஆர்டர்கள் குறைந்தது, மேலும் ஏப்ரல் 2013-ம் நிகழ்ந்த தொழிற்சாலை விபத்து ஆகியவற்றாலும் இந்திய ஏற்றுமதிக்கான போட்டித் தன்மை குறைந்தும் என்றே கூறலாம்.

அரசு செயல்பாட்டின் உதவி

'குறிப்பிட்ட சந்தைகளிலும் மற்றும் குறிப்பிட்ட பொருட்களின் திட்டங்களிலும் அரசாங்கத்தின் செயல்பாடுகள் ஏற்றமதிக்கு சற்றே உதவியாக இருந்தன' என்று அகமது குறிப்பிட்டார். இந்த ஆண்டின் துவக்கத்தில் அரசு, ஜவுளி மற்றும் பொறியியல் துறைகளுக்கு வலு சேர்க்கும் விதமாக வட்டி உதவி திட்டத்தை நீட்டிப்பு செய்தது போன்ற சில வலுவேற்றும் செயல்பாடுகளை அறிவித்தது.

வர்த்தக ஒப்பந்தங்களின் பலன்

நிதியமைச்சகத்தின் விமர்சனங்களை கணக்கில் கொள்ளாமல் வர்த்தகத் துறை, நட்பு நாடுகளின் தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறது. இதனால் வர்த்தகம் மேம்பட்டதாகவும் தெரிவித்தது

பெரும்பாலான மண்டல அல்லது இருநாடுகளுக்கான தடையற்ற வாணிக ஒப்பந்தங்கள் தெற்கு ஆசிய நாடுகளுடனும், தென் கிழக்கு ஆசிய நாடுகளுடனும் மற்றும் வட கிழக்கு ஆசிய நாடுகளுடனும் தான் உள்ளன என்று ஆனந்த் சர்மா குறிப்பிட்டுள்ளார்.

தெற்காசிய தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்களைப் பொறுத்த வரை, இந்தியாவிற்கு 12 பில்லியன் அளவிற்கு பெருமளவு அதிக வர்த்தகம் உள்ளது. 2009-ம் ஆண்டு இந்தோ-ஆசியான் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பின்னர், தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கான ஏற்றுமதியின் அளவு இரட்டிப்பாகியுள்ளது.

வர்த்தக இலக்கு

இந்த ஆண்டிற்கான ஏற்றுமதி குறியீடான 325 பில்லியன் டாலர்களை அடைந்து விட முடியும் என்று அரசு நம்புகிறது என்று வர்த்தக செயலர் எஸ்.ஆர். ராவ் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+