மும்பை: சிகே பிர்லா குழுமத்தின் முதன்மை நிறுவனமான ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் அக்டோபர் 2013-ல் அதன் உள்நாட்டு விற்பனை 20.8 சதவீதம் வீழ்ச்சியடைந்துள்ளதாக அறிவித்துள்ளது.
கொல்கத்தாவைச் சேர்ந்த இந்நிறுவனம் நடப்பு நிதியாண்டின் அக்டோபர் மாதத்தில் உள்நாட்டில் வெறும் 330 யூனிட்கள் மட்டுமே விற்பனையானது, முந்தைய ஆண்டில் இதே காலகட்டத்தில் செய்த 417 யூனிட்களைவிட 20.8 சதவீதம் குறைவானது என்று ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ் ஓர் அறிக்கையில் தெரிவித்துள்ளது.
அம்பாஸிடர் (அம்பி)
அக்டோபர் 2013-ல் இந்தக் குழுமத்தின் விற்பனையின் பெரும்பகுதி அதன் மிகப் பிரபலமான அம்பாஸிடர் மூலமாக வந்தது என்றும் அவை கடந்த அக்டோபர் 2012-ல் 278 யூனிட்கள் விற்பனையாகியதுடன் தற்போது 176 யூனிட்கள் விற்பனையாகியுள்ளன என்றும் இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
மிட்ஸுபிஷி பஜேரோ ஸ்போர்ட்
மேலும், இதன் சிறப்பான எஸ்யுவி மிட்ஸுபிஷி பஜேரோ ஸ்போர்ட் கடந்த ஆண்டின் 119 யூனிட்களில் இருந்து அக்டோபர் 2013-இல் 154 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
வின்னர்
இந்த அக்டோபர் 2013-இல் 24 யூனிட்கள் விற்பனையாகி உள்ள இந்நிறுவனத்தின் மிதமான வணிக வாகனமான வின்னர், சென்ற ஆண்டின் இதே மாதத்தில் 18 யூனிட்கள் விற்பனையாகியிருந்தன.
அக்டோபர் 2013-இல் வின்னரின் மொத்த உற்பத்தி 15லிருந்து 17 யூனிட்களாக உயர்ந்துள்ளது.
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ்
ஹிந்துஸ்தான் மோட்டார்ஸ், தற்போது அம்பாஸிடர், பிரீமியம் ஸெடான் ஸிடியா, பஜேரோ ஸ்போர்ட், பிரீமியம் எஸ்யுவிக்களான அவுட்லேண்டர் மற்றும் மாண்டேரோ ஆகியவற்றின் விற்பனையில் ஈடுபட்டுள்ளது. உள்நாட்டு சந்தைக்கென, வின்னரைத் தயாரிக்கிறது.
உற்பத்தி ஆலைகள்
தமிழ்நாட்டின் திருவள்ளூரிலும் மேற்கு வங்காளத்தின் உத்தர்பாராவிலும் இந்நிறுவனத்தின் உற்பத்தி ஆலைகள் உள்ளன.
More From GoodReturns

SGB: தங்க பத்திரம் வாங்கியுள்ளீர்களா.. முதல்ல இதை படிங்க.. ஏப்ரல் 1 முக்கியமான நாள்..!!

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

டிரம்புக்கு ஈரான் தந்த ரகசிய பரிசு என்ன தெரியுமா? : அவரே சொல்லிட்டாரு..!!



Click it and Unblock the Notifications