சென்னை: சுந்தரம் ஃபைனான்ஸ் லிமிட்டெட் நிறுவனத்தின் துணை நிறுவனமான சுந்தரம் இன்ஃபோடெக் சொல்யூஷன்ஸ் லிமிட்டெட், மூன்று இஆர்பி (ERP) ஒப்பந்தங்களை கைப்பற்றியுள்ளதாக தெரிவித்தது. இவற்றுள் ஒன்று அரசு சார்ந்தது என்றும், மற்ற இரண்டும் அரபு நாடுகளை சேர்ந்த அயல்நாட்டு ஒப்பந்தம் என்றும் தெரிய வந்துள்ளது. ஆனால் இந்நிறுவனம் இந்த ஒப்பந்தங்களின் மதிப்பு பற்றி எதுவும் குறிப்பிடவில்லை.
இந்தியாவின் முக்கிய துறைமுகங்களுக்கு சேவைகள் வழங்கி வரும், 30 வருடப் பழமையான பொதுத்துறை தொழில் நிறுவனத்தின் இஆர்பி ஒப்பந்தம் ஒன்றை கையகப்படுத்தியுள்ளது சுந்தரம் இன்ஃபோடெக். இந்த ஒப்பந்தத்தின் வாயிலாக, சுந்தரம் இன்ஃபோடெக் பொது துறை ஃபைனான்ஸ் & மெட்டீரியல்ஸ் மேனேஜ்மென்ட் மாட்யூல்களை, மைக்ரோசாஃப்ட் டைனமின்ஸ் ஏஎக்ஸ்-யை கொண்டு சீரமைக்கவுள்ளது.

மெல்போர்னைச் சேர்ந்த அடமான தொகுப்பாளரிடம் இருந்து ஐடி கன்ஸல்டிங் ஒப்பந்தம் ஒன்றையும், யூஏஇயைச் சேர்ந்த வாசனைத் திரவிய உற்பத்தி நிறுவனத்திடமிருந்து, பல்வேறு வடிவம் கொண்ட சொல்யூஷன்களை மைக்ரோசாஃப்ட் டைனமிக்ஸ் ஏஎக்ஸ் -ஐக் கொண்டு செயல்படுத்துவதற்கான ஒப்பந்தம் ஒன்றையும் இந்நிறுவனம் பெற்றுள்ளது.
மத்திய கிழக்குப் பகுதிகளின் வர்த்தகப் பங்களிப்பை அடுத்த 12-18 மாதங்களுக்குள் இரட்டிப்பாக்கும் குறிக்கோளுடன் இந்நிறுவனம் செயல்பட்டு வருவதாக ஒரு அறிக்கை தெரிவித்துள்ளது.
சுந்தரம் இன்ஃபோடெக்கின் சிஇஓவாகிய தீபா ரமேஷ் கூறுகையில், "எங்கள் நிறுவனம் ஆஸ்திரேலியாவில் விரிவாக்கப் பணிகள் மற்றும் தன் இருப்பை வலுப்படுத்துவதற்கான பணிகளைத் தொடரும் அதே வேளையில், யூஏஇ மற்றும் இந்தியாவின் முன்னணி பிஎஸ்யூ ஆகியவற்றுடனான ஒப்பந்தங்கள், சுந்தரம் இன்ஃபோடெக்கைப் பொறுத்தவரையில் மிக முக்கியமான திருப்புமுனையாக அமையும். அடுத்த 12-24 மாதங்களில், அரபு நாடுகளில் நிலவியல் ரீதியாகவும், விரிவுபடுத்துவோம் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது." என்று தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications