மும்பை: இந்திய விமானப்படை தன் விமான உபகரணங்களை தானியங்கி மயமாக்கவும் மின்னணு கண்காணித்தல் பணிகளுக்காகவும் 900 கோடி ருபாய் மதிப்புள்ள ஒரு ஒப்பந்தத்தை மென்பொருள் சேவை நிறுவனமான விப்ரோவிற்கு வழங்கியுள்ளதாக விமானப்படை பராமரிப்பு பணி அதிகாரி திரு.ப.கனகராஜ் தெரிவித்துள்ளார்.
இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக அனைத்து விமான பராமரிப்பு பணிகளும் மின்னணு பதிவுகளாக பெறப்படும். தற்போது பயன்படுத்தப்படும் புத்தகப்பதிவேடுகளுக்கு பதிலாக இந்த மின்னணு பதிவேடுகள் பயன்படும். இது ஒரு காகித பயன்பாட்டை முழுவதுமாக குறைக்கும் முயற்சி என திரு கனகராஜ் தெரிவித்தார்.
இந்த சந்திப்பின்போது, பல்லாண்டு மின்னணு பராமரிப்பு மேலாண்மை முறை போர் போன்ற சூழ்நிலைகளில் விமானப்படையை உடனடியாக ஆயத்தமாக்க உதவும் என தெரிவித்தார்.
தொழில்நுட்ப மேம்பாடு
இந்த திட்டத்தின் மூலமாக துறை வாரியான மின்னணு பராமரிப்பு மேலாண்மை முறையை இணையதள அடிப்படையில் இயங்கவைக்க விமானப்படை எண்ணியுள்ளது. இதன்மூலம் கட்டமைப்பு மேலாண்மை, விமான உபகரண திட்டமிடல் மற்றும் மேலாண்மை, பழுதுபார்ப்பு, பராமரிப்பு மற்றும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள இயலும்.
இரண்டு தளம்
இந்த திட்டத்திற்காக இரு இடங்களை தேர்வு செய்துள்ளதாகவும், அதில் ஒன்று விபத்து மேலாண்மை மையமாக செயல்படும் என்றும் திரு கனகராஜ் தெரிவித்தார்.
உலக தரத்திற்கு ஈடு
இந்த திட்டம் துல்லியமான மற்றும் வேகமான தகவல்கள் பறிமாற்றம் ற்றும் குறைந்த மனித சக்தியால் மேம்படுத்தப்படும். மேலும் இத்திட்டத்தின் மூலம் விமானப்படைக்கான மொத்த செலவினை குறைக்கும் என அவர் தெரிவித்தார்.
போட்டி நிறுவனம்
இந்த ஒப்பந்தத்தை பெற டாட்டா கன்சல்டன்சி, அதன் துணை நிறுவனமான சிஎம்சி மற்றும் சில நிறுவனங்கள் போட்டியிட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
170 விமான தளம்
இத்திட்ட விண்ணப்ப கோருகை விவரங்கள்படி முதற்கட்டமாக, இந்த புதிய திட்டம் விமானப்படையின் 550 விமானங்களை உள்ளடக்கிய அனைத்து 170 விமான தளங்களில் சிறிது சிறிதாக நடைமுறை படுத்தும் முன்னர், சில முக்கிய இடங்களில் மட்டும் நடைமுறை படுத்தப்படும் என தெரிகிறது.


Click it and Unblock the Notifications