செத்தான்ட சேகறு!! காப்புரிமை வழக்கில் சிக்கி தவிக்கும் சாம்சங்..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

கலிபோர்னியா: உலகின் மிகப் பெரிய ஸ்மார்ட்போன் தயாரிப்பு நிறுவனங்களான ஆப்பிளுக்கும் சாம்சங்குக்கும் இடையே சிலிக்கன் வேலி நீதிமன்றத்தில் ஒரு பில்லியன் டாலர் மதிப்புள்ள காப்புரிமை வழக்கு ஒன்று நடைபெற்று வருகிறது இது நாம் அனைவரும் அறிந்ததே. இதில் சாம்சங் நிறுவனம் ஆப்பிளின் ஐபோன் மற்றும் ஐபேட் ஆகியவற்றில் உள்ள மிக முக்கியமான அம்சங்களை காப்பியடித்து (திருடி) விட்டதாகவும் அதற்கு நஷ்ட ஈடாக 380 மில்லியன் டாலர் வழங்க வேண்டும் எனவும் ஆப்பிள் நிறுவனம் நிதிமன்றத்தில் கோரியது. (செத்தான்ட சாம்சங்)

 

ஆப்பிள் சார்பாக வாதாடிய வழக்கறிஞர் நஷ்ட மதிப்பைக் கணக்கிட்டு சில அறிக்கைகளைத் தாக்கல் செய்தபோது இவ்வாறு கோரிக்கை வைத்தார். அதில் ஆப்பிளின் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஜனவரி 9, 2007 அன்று சான் ஃபிரான்சிஸ்கோவில் நடைபெற்ற மேக்வேர்ல்ட் மாநாட்டில் முதலாவது ஐபோனை திறந்து வைத்து வெளியிடும் வீடியோவும் ஆதாரமாக சமர்பிக்கப்பட்டது.

முழுநேர வேலை

முழுநேர வேலை

அன்று தொடங்கி இன்று வரை ஸ்மார்ட்போன் மார்க்கெட்டில் தன் இடத்தைத் தக்க வைத்துக் கொள்ள சாம்சங் நிறுவனம் காப்பியடிப்பதை ஒரு முழுநேர வேலையாகவே செய்து வருவதாக ஆப்பிள் நிறுவனம் குற்றம் சாட்டியது.

விற்பனையில் நஷ்டம்

விற்பனையில் நஷ்டம்

"விதிகளை மீறிய தயாரிப்புகளை சாம்சங் விற்பனை செய்வதால் ஆப்பிளின் விற்பனையில் நஷ்டம் ஏற்பட்டுள்ளது" என்று ஆப்பிளின் நிறுவனத்தின் வக்கீல் ஹெரால்ட் மேக்லேன்னி நிதிபதியிடம் தெரிவித்தார்.

1.05 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு
 

1.05 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு

முந்தைய நிதிபதி ஒருவர் 26 சாம்சங் தயாரிப்புகள் ஆப்பிளின் 6 காப்புரிமைகளை விதிகளை மீறிப் பயன்படுத்தியதாகக் கூறி சாம்சங் நிறுவனம் 1.05 பில்லியன் டாலர் நஷ்ட ஈடு தரும்படி தீர்ப்பு வழங்கினார். ஆனால் அதில் 13 தயாரிப்புகளுக்கான கணக்கீட்டில் 400 மில்லியன் டாலரை நிதிபதி தவறாகக் கணக்க்கிட்டுவிட்டதாகக் கூறி நீதிபதி ஒருவர் மறு கணக்கீட்டுக்கு உத்தரவிட்டார்.

0 டாலர் டூ 400 மில்லியன் டாலர்

0 டாலர் டூ 400 மில்லியன் டாலர்

400 மில்லியன் டாலர் மறு கணக்கீட்டில் புதிய நிதிபதி சொல்லப்போகும் புதிய நஷ்ட ஈட்டுத்தொகை '0' வாகவும் இருக்கலாம் அல்லது 400 மில்லியன் டாலருக்கும் அதிகமாகவும் இருக்கலாம் என்பதால் எதிர்பார்ப்பு கூடியுள்ளது. (உள்ளதும் போச்சா!! ஆப்பிள்.. )

விமானப்படையின் ரூ.900 கோடி ஒப்பந்தத்தை தட்டிச் சென்ற விப்ரோ!!!விமானப்படையின் ரூ.900 கோடி ஒப்பந்தத்தை தட்டிச் சென்ற விப்ரோ!!!

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Apple wants $380M in patent trial with Samsung

Apple demanded today that Samsung Electronics pay it $380 million for copying vital iPhone and iPad features, as a billion-dollar patent fight between the world's two biggest smartphone makers resumed in a Silicon Valley courtroom.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X