மும்பை: நடப்பு நிதியாண்டின் நடப்புக்கணக்கு பற்றாக்குறை 56 பில்லியன் டாலர்களாக இருக்குமென்று ரிசர்வு வங்கியின் கவர்னர் திரு ரகுராம் ராஜன் புதன் அன்று தெரிவித்ததன் விளைவாக, வங்கிப்பங்குகள் விற்பனை காலை பரிவர்த்தனைகளில் 5 விழுக்காடு அளவிற்கு அதிகரித்துள்ளது.
இந்த நடப்புப் பற்றாக்குறை அளவானது மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 விழுக்காடும், இது கடந்த ஆண்டின் பற்றாக்குறையை காட்டிலும் 32 பில்லியன் டாலர் குறைவானதாகும். ரூபாய் மதிப்பில் காணப்படும் தெளிவற்ற நிலைக்கு எந்த ஒரு அடிப்படை காரணமும் இருப்பதாக தான் நினைக்கவில்லை என தெரிவித்தார்.

எஸ் வங்கி, ஆக்சிஸ் வங்கி, யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா, பேங்க் ஆஃப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கனரா வங்கி மற்றும் பஞ்சாப் நேஷனல் வங்கி ஆகியவற்றின் பங்குகள் தேசிய பங்குச் சந்தையில் 3 விழுக்காடு அளவிற்கு உயர்ந்திருந்தன.
தேசிய பங்குச் சந்தையில் வங்கி பட்டியலில் காலை 9.30 மணி அளவில் நிர்ணயிக்கப்பட்ட சி என் எக்ஸ் (CNX) நிப்டி அளவீடான 1.45 விழுக்காட்டிலிருந்து, 2.8 விழுக்காடாக உயர்ந்திருந்தது.

இதனிடையில், பணப்புழக்கத்தை அதிகரிக்க வரும் வாரத்தில் ரூ.8,000 கோடி மதிப்புள்ள பத்திரங்களை திறந்த சந்தை பரிவர்த்தனைகள் மூலம் விற்கப்போவதாக இந்திய ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications