மும்பை: ஆட்டோமொபைல் துறையின் முன்னணி நிறுவனமான மஹிந்திரா ஆண்டு மஹிந்திரா நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டு முடிவுகளை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் ஆட்டோமொபைல் துறை மட்டும் அல்லாமல் பல துறைகளில் இந்தியாவின் முன்னணி நிறுவனமாக திகழ்கிறது.
நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டில் மஹிந்திரா அண்ட் மஹிந்திரா நிறுவனத்தின் லாபம் 9.72% அதிகரித்து சுமார் ரூ.989.5 கோடி ரூபாய் லாபம் ஈட்டியுள்ளது. இத்தகைய லாபத்தை குறைந்த அளவிலான செலவினத்தின் மூலம் கிடைத்தது என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார்.
கடந்த வருடம் இதே காலாண்டில் இந்நிறுவனத்தின் லாபம் 901.8 கோடியாகும்.

2ஆம் காலாண்டின் முன்று மாதங்களின் மொத்த விற்பனை ரூ.8,814.33 கோடியாகும். கடந்த ஆண்டைவிட 8.74 சதவீதம் குறைவு என மும்பை பங்கு சந்தைக்கு சமர்பித்த அறிக்கையில் தெரிவித்தது.
இக்காலாண்டின் மொத்த செலவினம் ரூ.7,981 கோடியாகும். இது கடந்த ஆண்டை விட 10.04 சதவீதம் குறைவாகும்.
காலாண்டு முடிவுகளை வெளியிட்டதை தொடர்ந்து மும்பை பங்கு சந்தையில் இந்நிறுவன பங்கின் விலை 0.75 சதவீதம் அதிகரித்து ரூ.885.85 ரூபாயிக்கு வர்த்தகம் செய்யப்படுகிறது.


Click it and Unblock the Notifications