டெல்லி: இந்திய அரசிடம் இருந்து மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ரா நிறுவனம் சுமார் 630 வாகனங்களை வழங்க அதிகாரபூர்வமான ஆணையை அந்நிறுவனம் பெற்றுள்ளது.
இந்த வாகனங்களை நேபாள அரசுக்கு அன்பளிப்பாக வழங்கப்படவுள்ளன. வரும் நவம்பர் 19-ஆம் தேதி நேபாளத்தில் நடைபெறவுள்ள அரசியலைப்பு சபைக்கான தேர்தலுக்குத் தன்னுடைய ஆதரவைத் தெரிவுக்கும் விதமாக இந்தியா இந்த 630 வாகனங்களை அளிக்கிறது. இவை, நேபாள போலீஸ், பாதுகாப்புப் படைகள், ஆயுதம் தாங்கிய போலீஸ் படை மற்றும் தொடரணி ஆகியவற்றுக்குப் பயன்படுத்தப்பட உள்ளன.

இதை பற்றி மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் ஆட்டோ மற்றும் உபகரணங்கள் பிரிவின் சர்வதேசத் தலைமை செயல் அதிகாரி ரூஸ்பே இரானியிடம் கேட்டபோது "எங்களைப் பொறுத்த வரையில் இந்த நிகழ்வு, மஹிந்த்ரா அண்ட் மஹிந்த்ராவின் முக்கியக் கூறுகளான, நேர்மறை மாற்றத்தை வளர்ப்பதோடு, எங்களுடைய தயாரிப்புகளின் மேல் இரண்டு நாடுகளுடைய அரசாங்கங்கள் வைத்துள்ள மாபெரும் நம்பிக்கையை உணர்த்துவதாக உள்ளது" என்று மகிழ்ச்சியுடனும் புன்னகையுடன் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications