2014-இல் இந்தியாவில் சம்பளம் 11% உயர்வு!

சென்னை: மாதத்தின் முதல் நாள் நம் நினைவிற்கு வருவது சம்பளம் தான்.. என்ன சரிதானே பாஸ். சம்பளம், ஊதிய உயர்வு, இந்த வார்தைகளை கேட்டாலே நம் மகிழ்ச்சியில் திழைக்கும். இத்தகைய சம்பளத்தை பற்றி இங்கு சுவாரஸ்யமான சில தகவல்களை பார்போம்.

முதலில் ஒரு நல்ல செய்தி: இந்தியா நிறுவனங்கள் திறமையாளர்களை ஈர்ப்பதிலும், தக்கவைப்பதிலும் மும்முரமாக ஈடுபட்டு வருவதன் விளைவாக, 2014-இல் ஊழியர்களுக்கு சராசரியாக 11 சதவீத ஊதிய உயர்வு வழங்கப்படும் என்று எதிர்பார்க்கப் படுகிறது.

இப்போது, கெட்ட செய்தி: என்னதான் சம்பளம் உயர்ந்தாலும், பணவீக்கம் மற்றும் விலைவாசி உயர்வின் காரணமாக ஏற்றப்படும் சம்பளத்தின் உண்மையான மதிப்பு வெறும் 2% தான் இருக்கும். (அட பாவிகளா)

எல்லா உயர்வும் உயர்வல்ல

எல்லா உயர்வும் உயர்வல்ல

டவர்ஸ் வாட்சன் மேற்கொண்ட ஒரு ஆய்வின்படி ஆசியா பசிபிக் முழுவதிலும் 2014-இல் சராசரியாக 7% ஊதிய உயர்வு இருக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. சம்பளம் உயர்கின்ற அதே நேரத்தில் பணவீக்கத்தின் காரணமாக, எல்லாப் பொருட்களின் விலைவாசியும் கூடவே உயர்வதால் சம்பள உயர்வினால் ஏற்படும் பயன் மிகச் சொற்பமே.

உலக நாடுகள்

உலக நாடுகள்

பணவீக்கத்தையும் கணக்கில் கொண்டு இந்த ஊதிய உயர்வைக் கணக்கிடுகையில், நிகர உயர்வு சீனா மற்றும் வியட்நாமில் 4.9 சதவீதமாகவும், ஜப்பானில் 0.5 சதவீதமாகவும் இந்தியாவில் 2 சதவீதமாகவும் இருக்கும், மேலும் மிகக் குறைந்த நிகர ஊதிய உயர்வு அளிக்கும் நாடுகளின் பட்டியலில் இடம் பிடித்திருக்கின்றன.

ரொம்ப கஷ்டமப்பா

ரொம்ப கஷ்டமப்பா

இந்தியாவை உள்ளடக்கிய ஆசிய பசிபிக் நாடுகளில், திறமையான பணியாளர்களைக் கண்டு பிடிப்பதும் அவர்களைப் பணியில் தக்க வைப்பதும் மிகச் சிரமமான காரியம் என்று நிறுவனங்கள் அந்த ஆய்வின்போது தெரிவித்துள்ளன. கணக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட்ட நிறுவனங்களில் 80 சதவீத நிறுவனங்கள், 2014 -இல் அவர்களின் சம்பள ஒதுக்கீட்டின் பெரும்பகுதி திறமையான பணியாளர்களுக்கே கொடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளன. கணக்கெடுப்பில் பங்கேற்ற சில்லறை விற்பனைத் துறை சார்ந்த நிறுவனங்கள் அனைத்தும் இதே கருத்தைத் தெரிவித்திருக்கின்றன.

இந்தியா

இந்தியா

"எங்களுடைய ஆய்வின் மூலம், பெரும்பாலான தொழிலாளர்களும் பணியாளர்களும் இந்தியாவில் தர அடிப்படையிலான ஊதியத்தைப் பெற்று வருவது தெளிவாகத் தெரிகிறது" என்று டவர்ஸ் வாட்சனின் இந்திய இயக்குனர் சுபீர் பக்ஷி தெரிவித்தார்.

திறமையாளர்களுக்கான இடம் இந்தியா

திறமையாளர்களுக்கான இடம் இந்தியா

இந்திய நிறுவனங்கள், திறமையுள்ள பணியாளர்களைக் கவர்வதற்காகவும், தொழில் நுட்ப வல்லுனர்களைக் கவரவும் இரட்டை இலக்க ஊதிய உயர்வுகளை வழஞ்கி வருவதாக பஷீர் கூறினார். அதிகரித்து வரும் பணவீக்கமானது, ஊதிய உயர்வின் பலன்களை விழுங்கி விடுவதாகவும் அவர் கூறினார்.

லாபகரமான நிறுவனம்

லாபகரமான நிறுவனம்

"ஒரு நிறுவனம் சீரான வேகத்தில் வளர்ச்சியடைந்தால், அதன் செலவுகளை விட வருமானம் அதிகமாகி அதிக லாபத்தில் புரளும்போது மற்ற குறைவான வளர்ச்சியுள்ள நிறுவனங்களைக் காட்டிலும் சம்பளம் நிர்ணயிப்பதில் "அள்ளிக் கொடுக்கும் நல்ல மனசு" போல நடந்து கொள்ள முடியும் என்றும் ராக்யன் தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+