கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 5000 கோடி திரட்ட முடிவு!!! எஸ்பிஐ வங்கி..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: இந்தியாவின் மிகப் பெரிய பொதுத் துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி, இந்த நிதியாண்டின் இறுதிக்குள் ரூ.5000 கோடி திரட்ட முடிவு செய்துள்ளது. "திரட்டப்படவுள்ள தொகையும் அதற்கான கால அளவும் இன்னும் நிர்ணயிக்கப் படவில்லை, ஆனால் உத்தேசமாக ரூ. 5000 கோடி, இந்த மார்ச் மாத இறுதிக்குள் திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது என்று அதன் தலைவர் அருந்ததி பட்டாச்ச்சார்யா, பேங்காம் உச்சி மாநாட்டில் தெரிவித்தார்.

பாரத ஸ்டேட் வங்கி அதன் முக்கிய மூலதனத்தை வலுப்படுத்தவும், தகுதி பெற்ற நிறுவனங்களைப் பணி அமர்த்துவதன் மூலம், மூலதனமாக ரூ. 9000 கோடியைத் முதல் சுற்றில் திரட்ட முடிவு செய்துள்ளதாக கடந்த வாரம் அருந்ததி பட்டாச்ச்சார்யா அவர்கள் தெரிவித்தார்.

கடன் பத்திரங்கள் மூலம் ரூ. 5000 கோடி திரட்ட முடிவு!!! எஸ்பிஐ வங்கி..

இது தவிர, அரசு விருப்பப் பங்கு ஒதுக்கீடு மூலம் ரூ. 2000 கோடி கொடுப்பதாக உறுதியளித்துள்ளது. அரசினல் நடத்தப்படும் பாரத ஸ்டேட் வங்கியின் தலைவராக இந்த அக்டோபரில் பொறுப்பேற்ற அருந்ததி பட்டாச்சார்யா, நம்பகத்தன்மையுள்ள அனைத்துத் துறைகளுக்கும் கடன் அளிக்க உள்ளது என்றும், சில்லறை வணிகத்திற்கு ஆதரவாகவும், பக்கபலமாகவும் இருக்கும் என்று கூறினார்.

அக்டோபரில் பணவீக்கம் 10% உயர்ந்திருந்தாலும், சேவைத்துறை கட்டுப்பாட்டுக்குள் இருப்பதாலும், நல்ல பருவமழையால் சந்தைக்கு உணவுப்பொருள் வரத்து அதிகரித்துள்ளது, இதனால் சில்லறைப் பணவீக்கம் ஜனவரி மாதத்திற்குள் குறையும் என்று எதிர்பார்ப்பதாக பட்டாச்சார்யா தெரிவித்தார்.

எஃப்சிஎன்ஆர் (பி) வைப்புத் தொகைகளை அதிகர்ப்பது குறித்து ரிசர்வ் வங்கியிடமிருந்து எஸ்பிஐக்கு எந்தத் தகவலும் வரவில்லை என்றும் அவர் கூறினார். அமெரிக்க முதலீட்டாளர்களை ஈர்ப்பதற்காக ரிசர்வ் வங்கியால் செப்டம்பர் மாதத்தில் அறிமுகப்படுத்தப்பட்ட திட்டத்தில் சமீபத்தில் இணைந்த பாரத ஸ்டேட் வங்கி, 500 மில்லியன் டாலர் வரை ஈர்த்துள்ளது இந்த மாத இறுதியில் திட்டம் முடிவதற்குள் இத்தொகை மேலும் அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் அவர் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

SBI to raise Rs 5,000cr via bonds

Country's largest bank SBI on Friday said it will be raising up to Rs 5,000 crore through bonds (debt) by the fiscal end.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X