
"தி எம்ப்ளாயீஸ் பிராவிடன்ட் ஃபண்ட் ஆர்கனைஸேஷன் (இபிஎஃப்ஓ), நடப்பு நிதியாண்டுக்கான பிஎஃப் டெபாசிட்களுக்கு 8.5 சதவீதத்தைக் காட்டிலும் குறையாத வகையில் வட்டி விகிதத்தை வழங்கும்," என்று இபிஎஃப்ஓ-வின் உயர் அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
"இபிஎஃப்ஓ அதன் தலைமை தீர்மானக் குழுவான சென்ட்ரல் போர்ட் ஆஃப் டிரஸ்டீஸின் (சிபிடி) கூட்டத்தை அடுத்த மாதம் நடத்தத் திட்டமிட்டிருப்பதால், இது தொடர்பான தீர்மானம் டிசம்பர் மாதத்தின் போது முடிவு செய்யப்படக்கூடும்," என்றும் அவர் கூறியுள்ளார். 2011-12 ஆம் ஆண்டின் போது 8.25 சதவீத வட்டி விகிதத்தை வழங்கிய இபிஎஃப்ஓ, 2012-2013 ஆம் ஆண்டில் 8.5 சதவீத வட்டி விகிதத்தை வழங்கியுள்ளது.
வட்டி விகிதத்தைப் பற்றி விரைவாக முடிவு எடுப்பதற்கு, இபிஎஃப்ஓ-வின் தீர்மானக் குழுவான சிபிடியின் கூட்டத்தை உடனடியாக ஏற்பாடு செய்யும்படி வலியுறுத்தி வர்த்தக யூனியன்கள் தொழில்துறை அமைச்சகத்துக்கு கடிதம் எழுதியுள்ளன.


Click it and Unblock the Notifications