அதிநவின ஏடிஎம் மையங்களை அமைக்க புதிய திட்டம்!! எஸ்பிஐ..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: பாரத ஸ்டேட் வங்கி (SBI) தன்னுடைய பெரும் தானியங்கி பணவிநியோக இயந்திரங்களின் சேவை கட்டமைப்பை தானியங்கி சேவை மையங்களாக மாற்ற முயற்சிகள் மேற்கொண்டுள்ளது. இதில் வங்கிக்கையேடு பதிவு இயந்திரங்கள் (Passbook Printers) மற்றும் பணம் செலுத்தும் இயந்திரங்களும் இச்சேவைகளில் அடங்கும். மேலும் மார்ச் மாதத்திற்குள் எஸ்பிஐ வங்கியின் கிராமபுற கிளைகளிலும் ஏடிஎம்-யை இவ்வியந்திரங்களை நிறுவ திட்டமிட்டுள்ளது.

 

இதுபற்றி எஸ்பிஐ வங்கியின் நிர்வாக இயக்குனர் திரு கிருஷ்ன குமார் அளித்த பேட்டியில் அவ்வங்கி தானியங்கி பணம் செலுத்தும் இயந்திரங்களையும், தானியங்கி வங்கிப் பணிகளை செய்யும் இயந்திரங்களை சுமார் 1000 ஏடிஎம் மையங்களில் அமைக்க திட்டமிட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

8000 புதிய ஏட்எம் இயந்திரம்

8000 புதிய ஏட்எம் இயந்திரம்

எஸ்பிஐ தற்பொழுது, 17,804 வங்கியை ஒட்டிய ஏடிஎம் இயந்திரங்களையும், 13,945 வங்கி இல்லாத இடங்களில் தானியங்கி பணவிநியோக இயந்திரங்கள் செயல்பட்டு வருகிறது. அவ்வங்கி மேலும் 7,850 புதிய ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ CMS நிறுவனத்திற்கு ஒப்படைக்க ஆணை வழங்கியுள்ளது.

செலவும் மிச்சம்.. நேரமும் மிச்சம்..

செலவும் மிச்சம்.. நேரமும் மிச்சம்..

வங்கிப் பரிவர்தனை செலவினை ஒப்பிடும்போது கிளையில் ஒரு பரிவதனைக்கு ரூ.40 ரூபாய் செலவு ஆகிறது, ஆனால் ஒரு ஏடிஎம் மையத்தில் இதன் செலவு பாதியாக குறைந்து ரூ.20 மட்டுமே ஆகும் என திரு கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

12.39 கோடி டெபிட் கார்டுகள்
 

12.39 கோடி டெபிட் கார்டுகள்

டெபிட் கார்டுகளை மிகப்பெரிய அளவில் மக்களுக்கு வழங்கும் வங்கியாக எஸ்பிஐ திகழ்வதோடு சுமார் 12.39 கோடி அட்டைகளை இதுவரை வழங்கியுள்ளது. ஒரு சில பழைய கணக்குகளை தவிர அணைத்து கணக்குகளுக்கும் அட்டைகளை கொடுக்கப்பட்டுள்ளதோடு, பெரும்பாலும் கணக்கை துவங்கும்போதே அட்டைகளை வழங்கிவிடுவதாக திரு கிருஷ்ண குமார் தெரிவித்தார்.

வருடத்திற்கு 1,000 கிளைகள்

வருடத்திற்கு 1,000 கிளைகள்

செப்டம்பர் மாத இறுதியில் சுமார் 15,143 கிளைகளை எஸ்பிஐ கொண்டிருந்ததாகவும் மேலும் வருடத்திற்கு 1,000 கிளைகளை துவங்க திட்டமிட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

வங்கிக் கிளைகள்

வங்கிக் கிளைகள்

எஸ்பிஐ வங்கிக் கிளைகளில் 16 விழுக்காடு பெருநகரங்களிலும், 18 விழுக்காடு நகரங்களிலும், 28 விழுக்காடு சிறுநகரங்களிலும் மற்றும் 38 விழுக்காடு ஊர்களிலும் உள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

All SBI branches to have ATMs by March

SBI is upgrading a big chunk of its automated teller machine (ATM) network into self-service centers, which will include cash deposit machines and passbook printers.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X