புனே: ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் இந்திய தயாரிப்புகளின் விற்பனையை பன்னாடுகளில் விரிவாக்க செய்ய திட்டமிட்டுள்ளது. மேலும் அடுத்த ஓரிரு வருடங்களில் தனது ஏற்றுமதி சந்தைகளை 37 என்ற எண்ணிக்கையில் இருந்து 50க்கும் அதிகமாக உயர்த்தவும் திட்டமிட்டுள்ளது. இப்புதிய சந்தைகள் பட்டியலில் ஐரோப்பிய மற்றும் அமெரிக்க சந்தைகளை போன்று வளர்ச்சியடைந்த சந்தைகளை உள்ளடக்கியதாக இருக்கும் என அந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் ஜோகிந்தர் சிங் தெரிவித்தார்.
தற்போது தங்களின் தயாரிப்புகளில் 25 விழுக்காடு ஏற்றுமதி செய்யப்படுவதாகவும், அவற்றில் 40 விழுக்காடு எஞ்சின்கள் என்றும் கூறிய அவர், இந்தியாவை குறைந்த சக்தி எஞ்சின்கள் மற்றும் கார்களின் உற்பத்தி மையமாக உருவாக்க விரும்புதாகவும் தெரிவித்தார்.

புதிய தொழிற்சாலை
குஜராத் மாநிலத்தில் உள்ள சனந்த் பகுதியிலுள்ள அந்நிறுவனத்தின் இரு பசுமைவெளி தொழிற்சாலைகள் வரும் 2014 ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்திற்குள் உற்பத்திக்கு தயாராகும். அதன் பிறகு புதிய நிலப்பரப்புகளில் நுழையும் அந்நிறுவனத்தின் திட்டங்கள் துவங்கும்.
பிகோ மற்றும் ஈகோஸ்போர்ட்
தயாரிப்பு திறனில் 30 விழுக்கடுகளை கொண்ட பிகோ மற்றும் ஈகோஸ்போர்ட் வாகனங்களின் ஏற்றுமதியை உயர்த்துவது நிறுவனத்தின் திட்டமாகும்.
பழுதுபார்க்கும் வேலை
2010 ஜனவரி மாதம் முதல் 2012 ஜூன் மாதம் வரை தயாரிக்கப்பட்ட ஸ்டீரிங் மற்றும் சஸ்பென்ஷன் பழுதுகளை கொண்ட கார்களை (மொத்தம் சுமார் 1.66 லட்சம் கார்கள்) இரண்டாம் கட்டமாக திருமப்பெற்று சரிசெய்யும் பணி நடந்துகொண்டிருந்ததாகவும் தற்போது 85 விழுக்காடு சரிசெய்யப்பட்டுவிட்டதாகவும் அவர் தெரிவித்தார்.
More From GoodReturns

தங்கம், வெள்ளி விலை அடுத்த 1 வருடத்தில் எங்கிருக்கும்? இப்போது முதலீடு செய்வது லாபமா? நஷ்டமா?

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

மக்களுக்கு பெரும் ஏமாற்றம்.. மத்திய அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

ஓசூர் இளைஞர்களுக்கு குட் நியூஸ்..!! இனிமே ஓசூர் தான் Tech Hub..!! டைடல் பார்க் பணிகள் பரபர..!!

UPI -இல் பணம் அனுப்ப புதிய விதிமுறை: ஏப்ரல் 1 முதல் வருகிறது மேஜர் மாற்றம்!! மக்களே உஷார்!!

அமெரிக்கா–ஈரான் பதற்றம்: முதலீட்டாளர்களுக்கு புதிய “ரிவர்ஸ்” ஸ்ட்ராடஜி சொன்ன ஈரான் தலைவர்..!!

ரூ.200 இருந்தா போதும் ரூ.20 லட்சம் நிதியை உருவாக்கலாம்!! எப்படி தெரியுமா?

90ஸ் கிட்ஸ்களின் Gmail பிரச்சினைக்கு தீர்வு தந்த சுந்தர் பிச்சை: பழைய ஐடி-க்கு குட்பை..!!

சம்பள கமிஷனுக்கு முன்பாகவே அரசு ஊழியர்களுக்கு சம்பள உயர்வு: அதுவும் ஏப்ரல் மாதத்திலேயே வர போகுது!!



Click it and Unblock the Notifications