இந்தியாவின் முதல் தனியார் சர்வதேச விமான நிலையம் கேரளாவில் துவக்கம்!!!..

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

திருவனந்தபுரம்: கேரள மாநிலத்தின் பத்தனம்திட்டா மாவட்டத்திலுள்ள அரன்முலா என்னும் ஊரில் சர்வதேச விமான நிலையம் அமைக்க நிபந்தனைகளுடன் சுற்றுசுழல் அனுமதி கிடைத்துள்ளது. இது இந்திய நாட்டின் முதல் தனியார் சர்வதேச விமான நிலையம் என்பது குறிப்பிடதக்கது.

கேஜ்எஸ் அரன்முலா சர்வதேச விமான நிலையம் என்ற நிறுவனத்தால் தொடங்கப்படும் இந்த 2000 கொடி ருபாய் திட்டம், பல்வேறு அரசியல் மற்றும் சுற்று சுழல் எதிர்ப்புகளை சந்திக்கவேண்டியிருந்தது.

செவ்வாய் கிழமை நடந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் அந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் ஜிஜி ஜார்ஜ் பேசுகையில், இத்திட்டம் உரிய முறையில் நிறைவேற்ற அனைத்து அனுமதிகளையும் பெற முயற்சி செய்து வருகிறோம்.

மூன்று நிபந்தனைகள்

மூன்று நிபந்தனைகள்

இவற்றில் சிவில் விமான போக்குவரத்து துறை, சுற்றுச்சுழல் மற்றும் வனத் துறை, உள்துறை மற்றும் கேரள மாநில அரசு ஆகியவற்றிடம் அனுமதிகள் பெறப்பட்டுள்ளன. மேலும், சுற்றுச்சுழல் மற்றும் வனத்துறை முன்வைத்துள்ள மூன்று நிபந்தனைகளை நிறைவேற்ற வேண்டும்.

மாநில அரசின் 10% பங்கு

மாநில அரசின் 10% பங்கு

மேலும் இத்திட்டம் மாநில அரசின் சில அனுமதிகளை பெற வேண்டியுள்ளது. இந்நிறுவனத்தில் 10 சதவிகித பங்குகளை கொண்ட மாநில அரசு அந்நிறுவனத்தின் உயர்நிலை குழுவில் ஒரு இயக்குனரை நியமித்து 55 ஏக்கர் நிலத்தை வழங்கும் என ஜார்ஜ் தெரிவித்தார்.

டிசம்பர் 2015

டிசம்பர் 2015

முதல் கட்டமாக 500 ஏக்கர் நிலபரப்பில் விமான நிலையத்தை கட்ட துவங்கியுள்ளது. டிசம்பர் 2015ஆம் ஆண்டிற்குள் விமான நிலையத்தை திறக்க முடிவு செய்துள்ளோம் என ஜிஜி ஜார்ஜ் தெரிவித்தார்.

விமான நிலைய நகரம்

விமான நிலைய நகரம்

சிறப்பு பொருளாதார மண்டலத்தை கொண்டு ஒரு ஒருங்கிணைந்த விமான நிலைய நகரம் அமைக்கப்படும். ஒரு பல சிறப்பு மருத்துவமனை, சிறப்பங்காடி, உணவகங்கள் மற்றும் சர்வதேச தரத்தில் ஒரு பள்ளி ஆகிய பிற வசதிகளும் திட்டமிடப்பட்டுள்ளன.

ஏல விண்ணப்பம்

ஏல விண்ணப்பம்

மலேசிய விமானநிலைய உரிமையாளர்கள், எமிரேட்ஸ், ஏடி பாரிஸ் மற்றும் சங்கி சிங்கப்பூர் ஆகிய நிறுவனங்களிலிருந்து விமான நிலைய பணிகளுக்கான ஏல விண்ணப்பம் கோரியுள்ளது.

நாகோ நெதர்லாண்ட்ஸ்

நாகோ நெதர்லாண்ட்ஸ்

நாகோ நெதர்லாண்ட்ஸ் விமானநிலைய ஆலோசனை நிறுவனம் விமான நிலைய அடிப்படை கட்டமைப்பு திட்டத்தை தீட்டியுள்ளது. எர்ன்ஸ்ட் மற்றும் யங்கு (EY) நிறுவனம் போக்குவரத்து மற்றும் நிதி ஆய்வு அறிக்கையை மேற்கொண்டுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

‘Green’ signal for first private airport

The country’s first private-sector international airport, at Aranmula in Pathanamthitta district of Kerala, has received environmental clearance subject to conditions.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X