ஸ்டீவ் ஜாப்ஸின் ஆப்பிள் தெரியும்!!.. அது என்ன மஹிந்திராவின் ஆப்பிள்...

மும்பை: மோட்டார் வாகனங்கள், ஐடி, ரியல் ஸ்டேட் துறைகளை அடுத்து மஹிந்திரா நிறுவனம் இப்பொழுது தீவிரம் காட்டி வருவது விவசாய வணிக துறையில் தன் முனைப்பை காட்டிவருகிறது. சபோரோ (Saboro) என்னும் பெயரில் இந்தியாவின் முதல் பிராண்டட் ஆப்பிளை கொண்டுவர அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது உள்ளது (சபோரோ என்றால் ஸ்பானிய மொழியில் சுவையானது என்று பொருள்).

இவை தரத்தில் உயர்ந்ததாக இருப்பினும், சந்தையில் காணப்படும் அமெரிக்க மற்றும் சீன நாடுகளில் இறக்குமதி செய்யப்படும் ஆப்பிள்களை விட குறைந்த விலையில் விற்கப்பட இருப்பதால் மற்ற நிறுவனங்களுக்கு சபோரோ ஆப்பிள் சவாலாக அமையும்.

இந்தியாவின் முதல் பிராண்டட் ஆப்பிள்

இந்தியாவின் முதல் பிராண்டட் ஆப்பிள்

மஹிந்திரா குழுமத்தின் அங்கமான மஹிந்திரா ஷுப்லாப் (Mahindra Shublabh) இந்த ஆப்பிளை இந்த மாதம் ஹைதராபாத் நகரில் அறிமுகப்படுத்த உள்ளது. "இந்திய ஆப்பிள்களை உலகளவில் வர்த்தகம் செய்ய ஊக்குவிக்கவோ அல்லது நிலைநிறுத்தவோ இயலாத நிலையில் உள்ளோம், ஆனால் சபோரோ நிறுவனம் முதன் முதலாக வர்த்தக குறியிடப்பட்ட தேசிய (Branded) ஆப்பிளாக விளங்கும்" என மஹிந்திரா குழுமத்தின் விவசாயம் சார்ந்த வர்த்தகத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அஷோக் ஷர்மா தெரிவித்தார்.

 2 மில்லியன் டன் ஆப்பிள்

2 மில்லியன் டன் ஆப்பிள்

ஒரு வருடத்திற்கு 2 மில்லியன் டன் ஆப்பிள்களை மட்டுமே உற்பத்தி செய்து உலகிலேயே நான்காவது இடத்தை பிடித்துள்ளது இந்தியா, ஆனால் சீனாவில் ஆப்பிள்களின் உற்பத்தி 34 மில்லியன் டன்களை ஒப்பிடுகையில் இந்தியா மிகவும் பின்தங்கியே உள்ளது.

விற்பனை கூடங்கள்

விற்பனை கூடங்கள்

இறக்குமதி செய்து விற்கப்படும் ஆப்பிள் விலை கிலோவிற்கு 200 ருபாய் என உள்ள நிலையில், சபோரோ கிலோ 170 ரூபாய்க்கு விற்கப்படும். ஹெரிடேஜ் குழுமம் முதன் முதலில் ஹைதராபாதில் சபோரோவை விற்கும். பிறகு ரிலையன்ஸ் ப்ரெஷ் மற்றும் கோத்ரேஜ் நேச்சர் பாஸ்கட் விற்பனையகங்கள் உட்பட சுமார் 200 விற்பனை கூடங்களில் விற்கப்படும்.

ஏற்றுமதி

ஏற்றுமதி

மஹிந்திரா குழுமம் தான் ஏற்கனவே திராட்சை பழங்களை ஏற்றுமதி செய்து வரும் ஐரோப்பா, தென் கிழக்கு ஆசியா மற்றும் ரஷ்யா போன்ற நாடுகளுக்கு ஆப்பிளை ஏற்றுமதி செய்ய விழைந்துள்ளது.

விவசாயிகளின் எண்ணிக்கை

விவசாயிகளின் எண்ணிக்கை

இத்திட்டதை அடுத்து மஹிந்திரா மேலும் தற்போது தன்னிடம் உள்ள ஆயிரம் ஒப்பந்த விவசாயிகளின் எண்ணிக்கையை இரட்டிப்பாக்க விரும்பியுள்ளது. சபோரோவின் பெயரில் வாழைபழங்களையும் மாம்பழங்களையும் கூட விற்க எண்ணியுள்ளது.

தமிழ்நாடு!!..

தமிழ்நாடு!!..

ஆப்பிள் உற்பத்தி செய்யும் மாநிலங்களான ஜம்மு காஷ்மீர், ஹிமாச்சல பிரதேசம் மற்றும் உத்தரகாண்ட் மாநிலங்களோடு, மஹிந்திரா குஜராத், உத்திரப் பிரதேசம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களையும் நாடவுள்ளது.

வர்த்தக இலக்கு

வர்த்தக இலக்கு

"நாங்கள் உத்திகளை மாற்றியதோடு ஏற்றுமதி மற்றும் இறக்குமதி சந்தைகளிலிருந்து சமமான பங்களிப்பினை எதிர்பார்கிறோம். தற்போதய இலக்கான ரூபாய்.100 கோடியிலிருந்து, விற்பனை இலக்காக ரூபாய்.300 கோடியை 2016 ஆம் ஆண்டிற்குள் அடைய எண்ணியுள்ளோம்" என ஷர்மா தெரிவித்தார்.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+