சென்னை: கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதியுடன் முடிவடைந்த காலாண்டில் லக்ஷ்மி விலாஸ் வங்கியின் நிகர லாபம் 67.4 விழுக்காடு சரிவடைந்துள்ளதாக அவ்வங்கி தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ருபாய் 17.93 கோடியை லாபமாக ஈட்டிய அவ்வங்கி தற்பொழுது ருபாய் 5.85 கோடி ருபாய் மட்டுமே ஈட்டியுள்ளது. வராக்கடன் நிதியை அதிகரித்ததே இதற்கு காரணம் என அவ்வங்கி தெரிவித்துள்ளது.
இந்த காலாண்டில் வங்கியின் மொத்த வருமானம் 12.5 விழுக்காடு அதிகரித்து ரூபாய் 536.76 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் வருமானம் ரூபாய் 477.01 கோடியாக இருந்தது என அவ்வங்கியின் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் மொத்த பயன்தரா சொத்துக்களின் (NPA) மதிப்பு 4.5 விழுக்கட்டிலிருந்து 5.22 விழுக்காடாக உயர்ந்தது. பயன்தரா சொத்துக்களின் நிகர மதிப்பு 2.95 விழுக்காட்டிலிருந்து 3.77 விழுக்காடாக உயர்ந்ததுள்ளது.

அத்தியாவசிய முதல் இருப்பு விகிதம் பசேல்-2 விதிமுறைகள் படி 11.29 விழுக்காடாக இருக்கிறது.
நடப்பு நிதியாண்டின் அரையாண்டு காலத்தில் ரூபாய்.31.20 கோடியை நிகர லாபமாக ஈட்டியிருந்தது. கடந்த ஆண்டு இதே அரையாண்டில் நிகர லாபம் ரூபாய்.43.16 கோடியாக இருந்தது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் வைப்புத்தொகைகள் ரூபாய் 14,639 கோடியிலிருந்து 12.41 விழுக்காடு உயர்ந்து ரூபாய்.16,455 கோடியாக பதிவானது.
More From GoodReturns

அமெரிக்க வங்கி வேலைக்கு டாட்டா.. வீட்டை விற்றுவிட்டு குடும்பத்துடன் உலகம் சுற்றும் IIT இளைஞர்!

கோயம்புத்தூரா கொக்கா..!! சத்தமே இல்லாமல் சாதித்த கோவை..!!பெங்களூர்லாம் பக்கத்துலயே வர முடியாது!!

ஒட்டுமொத்த அமெரிக்காவுக்கும் ஷாக் கொடுத்த எலான் மஸ்க்.. டிரம்ப்-க்கு சவாலா..? யாரு சாமி நீ..?!

வேலையை விட போறீங்களா? ஏப்ரல் 1 வரை வெயிட் பண்ணுங்க..!! சட்டமே மாறுது.. ஊழியர்கள் கை ஓங்க போகுது!!

வறுமையை வென்று சாதனை படைத்த பொன்னரசி! லட்சங்களில் டர்ன் ஓவர்! முருங்கை டூ மல்டிநேஷனல் பிசினஸ்!

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

தங்கம் விலை ரூ.17,000 சரிவு: ஈரான் போரால் தங்க சந்தையில் ஏற்பட்ட மாற்றம்..! இந்த வாரமும் விலை குறையுமா?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

பொசுக்குன்னு தங்கம் விலை எகிறிவிட்டதே.. மொத்தமும் காலி.. இதென்ன மாயம்.. !

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!



Click it and Unblock the Notifications