குறைந்த காலத்தில் அதிக லாபம் பெற இது சரியான வழி!!!

By Super
Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

சென்னை: ரிசர்வ் வங்கி வங்கிகளுக்கு அளிக்கும் கடன் தொகையின் வட்டி விகிதத்தை 25 அடிப்படை புள்ளிகளை கடந்த மாக இறுதியில் உயர்த்தியது. இதனை தொடர்ந்து குறைந்த கால வங்கி வைப்பு நிதிகள் லாபம் தருவதாக உள்ளன. குறைந்த கால வைப்பு நிதிகளினால் பயனடைவோர் மற்றும் குறைந்த வருமான வரி செலுத்துவோர் இந்த சாதகமான சூழ்நிலையை பயன்படுத்திக்கொண்டு 25 முதல் 125 ஆதார புள்ளிகள் அளவிலான லாபத்தை அடையலாம்.

குறைகிய கால வைப்பு நிதிகளில் அதிக லாபம் அளிக்கும் வங்கிகளை இப்பொழுது பார்ப்போம்.

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா

எஸ்.பி.ஐ வங்கியில் ரூபாய் 1 கோடிக்கும் குறைவான 180 முதல் 210 நாட்கள் முதிர்வு காலம் உடைய வைப்பு நிதிகளுக்கு வட்டி விகிதம் 6.8 விழுக்காட்டிளிருந்து 7 விழுக்காடாக உயர்த்தியுள்ளது. இதன் மூலம் முதலீட்டாளர்கள் ஒரு ஓரளவு லாபத்தை பெறமுடியும்.

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி

பஞ்சாப் நேஷனல் வங்கி பல்வேறு முதிர்வு காலங்களுக்கு வட்டி விகிதத்தை இப்புதிய திட்டத்தின் மூலம் 25 அடிப்படை புள்ளிகள் வரை உயர்த்தியுள்ளது. 271 நாட்களுக்கும் அதிகமான முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு முன்பு 7.5 சதவிதம் வட்டி அளிக்கப்படு வந்தது தற்போது 8 சதவிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் 180 முதல் 270 நாட்கள் முதிர்வு காலம் கொண்ட வைப்பு நிதிகளுக்கு 7.5 சதவீதமும், 91 நாட்கள் முதல் 179 நாட்கள் வைப்பு நிதிகளுக்கு 7.5 சதவீத வட்டியும் வழங்குகிறது.

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா

யூனியன் பேங்க் ஆஃப் இந்தியா 46 முதல் 120 நாட்கள் வரை உள்ள வைப்புகளுக்கு வட்டியை 7.5 விழுக்காடு வரை உயர்த்தியுள்ளது.

கனரா வங்கி

கனரா வங்கி

கனரா வங்கி 46 முதல் 179 நாட்கள் வரையிலான 1 கோடி ரூபாய்க்கும் குறைவான வைப்பு நிதிகளுக்கான வட்டியை 7.5 சதவிதமாக உயர்த்தியுள்ளது. 270 நாட்கள் முதல் 1 வருட கால வைப்பு நிதிகளுக்கு 8.25 சதவித வட்டி வழங்குகிறது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

Look at short term bank fixed deposit interest rates after recent policy rate hike

Recent repo rate hike of 25 basis points by the RBI in the monetary policy review on October 29th has fared well for the short-term fixed deposits.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X