மும்பை: இந்தியாவின் முன்னணி டெலிக்காம் நிறுவனமான பார்தி ஏர்டெல் உலகெங்கும் தனது தொலைதொடர்பு சேவையை அளித்துவருகிறது. இந்நிலையில் ஆப்பிரிக்காவில் தன்னுடைய டெலிகாம் டவர் வணிகத்தை 1.8 பில்லியன் டாலருக்கு விற்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளதாக சிஎன்பிசி-டிவி18 தெரிவித்தது. இந்த ஒப்பந்தத்தின் மூலம், இந்நிறுவனத்தின் 9.69 பில்லியன் டாலர் கடன் தொகையை குறைக்க உதவும் என அந்நிறுவனத்தின் முத்த அதிகாரி தெரிவித்தார்.
முன்னதாக, இந்த நிறுவனம் அதன் ஆப்பிரக்கா டவர் வர்த்தகத்தை இந்திய டவர் பிரிவுக்கு மாற்ற பரிசீலிப்பதாக அறிவிக்கப்பட்டது, ஆனால் இத்திட்டம் சில காரணங்களுக்காக தடைப்பட்டது. பார்தி ஏர்டெல் நிறுவனத்திற்கு சொந்தமாக ஆப்பிரிக்காவில் 15,000 டவர்கள் உள்ளது. இந்த அறிவிப்பை தொடர்ந்து ஹீலியோஸ், ஏடிசி, ஈட்டன் மற்றும் ஐஹெச்எஸ் போன்ற நிறுவனங்கள் இந்த வர்த்தகத்தை வாங்க முன்வந்துள்ளதாக பார்தி ஏர்டெல் நிறுவனம் தெரிவித்ததுள்ளது. இதைபற்றி அந்நிறுவனத்தின் உயர் அதிகாரிகளை அனுகியபோது கருத்துச் சொல்ல அந்நிறுவனம் மறுத்துவிட்டது.

கடந்த மாதம் நிறுவனத்தின் காலாண்டு முடிவுகளை அறிவித்த பின்னர், பார்தி குரூப் தலைமை நிதி அதிகாரி சார்வ்ஜித் சிங் தில்லான் கூறுகையில், இந்நிறுவனம் ஆபிரிக்காவில் தன்னுடைய டவர் வணிகத்தை ஒரு தனி நிறுவனமாக இயக்க விரும்பவில்லை, மேலும் அதன் ஆப்பரேட்டிங் அமைப்பை மாற்றி அமைப்பது பற்றி யோசித்து வருகிறோம் என்று அவர் தெரிவித்தார்.
பார்தி நிறுவனத்தின் பெரும்பாலான கடன் 2010ஆம் ஆண்டில் ஆப்பிரிக்காவின் ஜெயின் டெலிகாம் நிறுவனத்தின் வர்த்தகத்தை 10.7 பில்லியன் டாலருக்கு கையகப்படுத்தியதால் ஏற்ப்பட்டது ஆகும். சமீபத்தில், பார்தி நிறுவனத்தின் செய்தி தொடர்பாளர், ஒரு பத்திரிக்கை நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில் நிறுவனம் அதன் இருப்புநிலை அளவு மற்றும் வலிமைக் மிகுதியாக கொண்டு "மிகவும் வலிமையான நிலையில்" இருப்பதாக அவர் தெரிவித்தார். அதன் தற்போதைய கடன்/ வட்டி, வரிகள், தேய்மானம், கடன் தவணை செலுத்துதல் ஆகிய செலவீனங்கள் கழிக்கப்படும் முன் உள்ள வருவாய் (EBITDA) விகிதம் கிட்டத்தட்ட 2.2 சதவீதமாக ஆக உள்ளது 2011ஆம் ஆண்டு வருவாய் விகிதம் 3 சதவீதமாக இருந்தது குறிப்பிடதக்கது.
More From GoodReturns

48 மணி நேரத்தில் ரூ.15,000 எகிறிய தங்கம் விலை? இனி மேலாவது குறையுமா? சவரன் எங்கே போய் நிற்கும்?

ஈரான் போரால் Lockdown அறிவித்த முதல் நாடு.. அதிர்ச்சியில் மக்கள்..!! அடுத்தடுத்து 14 நாடுகள்..!!

சீனா கொடுக்கும் ஷாக் ட்ரீட்மென்ட்.. டிரம்ப்-க்கு இது தெரியுமா..? Gold தலையெழுத்தை மாற்றும் விஷயம்..!!

இனி வேலை செய்யவே தேவையில்லை.. மாசம் மாசம் அக்கவுண்டில் பணம் வரும்..! ஏஐ உருவாக்கிய புதிய பொருளாதாரம்..!

தங்கம் விலை அதிரடி சரிவு: மதுரை மக்களுக்கு கிடைத்த பொன்னான வாய்ப்பு!!

இருளில் மூழ்கப் போகிறதா பெங்களூரு?? மக்களே அடுத்தடுத்த பிரச்சினை வந்துட்டே இருக்கு..!!

ரஷ்யா போட்ட தடை.. உலக நாடுகள் ஷாக்.. இந்தியாவின் ரியாக்ஷன் என்ன..?

தங்கம் விலை அதிரடி உயர்வு: தொடர் சரிவில் இருந்த விலை திடீரென யூடர்ன் அடித்தது ஏன்?

டிரம்ப்-இன் ஈரான் போர் நிறுத்த அறிவிப்பு பின்னணியில் விளையாடிய பல்லாயிரம் கோடி பணம்!!

தங்கம் விலை ரூ.17500 உயர்வு.. அதிர்ச்சியில் மக்கள்.. இனியும் உயருமா - முக்கிய அப்டேட்..?

தங்கம் விலை தான் குறையுதே.. இப்போ வாங்கலமா? மக்கா இது தெரியாம வாங்குன மொத்த பணமும் அதோகதி தான்..!!



Click it and Unblock the Notifications