14 பாலிஸிகளின் விற்பனையை முடக்க திட்டம்!!! எல்ஐசியின் அதிரடி முடிவு...

மும்பை: நாட்டின் இன்சூரன்ஸ் ஜாம்பவானாகிய லைஃப் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன், ஜீவன் மித்ரா மற்றும் அன்மோல் ஜீவன் உள்ளிட்ட சுமார் 14 பாலிஸிக்களின் விற்பனையை நிறுத்திவிட முடிவு செய்துள்ளது.

இந்த 14 பாலிஸிக்களுள், ஏற்கெனவே கன்வர்ட்டிபிள் டெர்ம் அஷ்யூரன்ஸ், சில்ட்ரன் டிஃபர்ட் என்டோமென்ட் அஷ்யூரன்ஸ் ஆகிய ஏழு பாலிஸிக்களை நவம்பர் 16 ஆம் தேதியிலிருந்து எல்ஐஸி வாபஸ் பெற்றுக் கொண்டுவிட்டது.

ஜீவன் மித்ரா, ஜீவன் பாராமுக் திட்டம், எல்ஐஸியின் பீமா அக்கவுன்ட் I மற்றும் II உள்ளிட்ட சுமார் ஐந்து பாலிஸிக்கள் நவம்பர் 23 ஆம் தேதியிலிருந்து எல்ஐஸியின் பெட்டகத்திலிருந்து அகற்றப்பட்டுவிடும்.

இவை தவிர, நியூ ஜீவன் நிதி மற்றும் அன்மோல் ஜீவன் I ஆகிய இரு பாலிஸிக்களும் நவம்பர் 30 ஆம் தேதியிலிருந்து நிறுத்தப்பட்டுவிடும்.

14 பாலிஸிகளின் விற்பனையை முடக்க திட்டம்!!! எல்ஐசியின் அதிரடி முடிவு...

இவற்றுள் பெரும்பாலான பாலிஸிக்கள் நிறுத்தப்படுவது, விதிமுறைப்படியிலான செயல்பாட்டின் ஒரு பகுதியே என்று எல்ஐஸியின் மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

புதிய தனிப்பட்ட திட்ட விதிமுறைகளை லைஃப் இன்சூரன்ஸ் இண்டஸ்ட்ரி செயல்படுத்துவதற்கான காலவரையறையை மூன்று மாத காலத்துக்கு நீட்டிப்பு செய்துள்ளது இன்சூரன்ஸ் ரெகுலேட்டரி அண்ட் டெவலப்மென்ட் அத்தாரிட்டி (ஐஆர்டிஏ). இந்த புதிய விதிமுறைகள், இன்சூரன்ஸ் பாலிஸிக்களை வாடிக்கையாளர்களுக்கு மேலும் எளிமையாக்கிக் கொடுக்கும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளன.

"இந்த புதிய கட்டுப்பாடு விதிமுறைகள் ஒத்துப்போகாத, நடைமுறையில் உள்ள அனைத்து க்ரூப் பாலிஸிக்கள் மற்றும் தனிப்பட்ட திட்டங்கள் வாபஸ் பெறப்படும்," என்று ஐஆர்டிஏ ஒரு சுற்றறிக்கையில் அறிவிக்கப்பட்டு இருந்தது.

க்ரூப் பாலிஸிக்களில் ஜூலை 2013 பிறகு யாரையும் சேர்க்கப்படவில்லை எனினும், அனைத்து க்ரூப் பாலிஸிகளுக்கும், அந்த பாலிஸியின் புதுப்பிப்பு காலத்தின் போது, க்ரூப் திட்டம் ஏதேனும் மாற்றம் செய்யப்பட்டு, மாற்றியமைக்கப்பட்ட பதிப்பு அறிமுகப்படுத்தப்பட்டிருந்தால், அதற்கு மாறுவதற்கு ஒரு வாய்ப்பு வழங்கப்படும் என்றும் ஐஆர்டிஏ தெரிவித்துள்ளது.

தனியார் துறையைச் சேர்ந்த அதன் போட்டி நிறுவனங்களோடு ஒப்பிடுகையில், எல்ஐஸி நடப்பு நிதியாண்டின் முதல் பாதியில், ப்ரீமியம் வசூலில் சுமார் 7% வளர்ச்சியை பதிவு செய்து வெகு சிறப்பாக செயலாற்றியுள்ளது.இந்நிறுவனம் செப்டம்பர் மாதத்தோடு முடிவடைந்த ஆறு மாத காலகட்டத்தில், சுமார் 37,906 கோடி ரூபாய் ப்ரீமியம் வருவாயுடன் சுமார் 7.26% வளர்ச்சியைக் கண்டுள்ளது.

எல்ஐஸி இதுவரையில், ஜீவன் அஸ்தா, மார்க்கெட் ப்ளஸ் I, ஜீவன் நிச்சய் மற்றும் ஜீவன் வர்ஷா உள்ளிட்ட 19 இதர பாலிஸிகளை வாபஸ் பெற்றுவிட்டதாக இந்நிறுவனத்தின் இணையதளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+