சன் தொலைக்காட்சியின் 2-ம் காலாண்டின் வருவாய் 11% உயர்ந்தது!!..

சென்னை: சன் தொலைக்காட்சி நிறுவனம் நடப்பு நிதியாண்டின் 2ஆம் காலாண்டு முடிவுகளை கடந்த வாரம் அறிவித்தது. இந்நிறுவனத்தின் 2ஆம் காலாண்டில் மொத்த லாபம் 11.55 சதவீதம் உயர்ந்து சுமார் ரூ.169.16 கோடி ரூபாயை ஈட்டியுள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.151.65 கோடியாக இருந்தது குறிப்பிடதக்கது. செயல்பாடுகளின் நிகர வருவாய் 7.63% அதிகரித்து ரூ.466.41 கோடியாக 2ஆம் காலாண்டில் உயர்ந்தது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.433.34 கோடியாக இருந்தது.

செப்டம்பர் 30, 2013 அன்று நிறைவடைந்த 2ஆம் காலாண்டில் இந்நிறுவனத்தின் மொத்த வருவாய் ரூ 504.21 கோடி என அறிவித்துள்ளது. இது சென்ற ஆண்டின் இதே காலாண்டில் ரூ.442.95 கோடியாக இருந்தது எனவே நிகரலாபம் 13.83 சதவிகிதம் ஆக உயர்ந்துள்ளது.

ஹைதெராபாத் சன்ரைசர்ஸ்

ஹைதெராபாத் சன்ரைசர்ஸ்

மேலும் இந்நிறுவனத்தின் ஜ.பி.எல் ஹைதெராபாத் சன்ரைசர்ஸ் பிரிவின் மூலம் 103.96 கோடி வருமானம் ஈட்டியுள்ளது. இதற்கான செலவினம் ரூ.137.84 கோடியாகும். கடந்த ஆண்டின் இதே காலாண்டில் ஜ.பி.எல் பிரிவின் மூலம் கிடைத்த வருமானம் ரூ.98.54 கோடியாகவும் செலவினம் ரூ.129.33 கோடியாகவும் இருந்தது.

சரிவில் தொங்கும் சன் டிவி..

சரிவில் தொங்கும் சன் டிவி..

ஏஞ்சல் ப்ரோகிங்கின் ஊடக ஆராய்ச்சி ஆய்வாளரான அமித் பட்டில் சன் தொலைக்காட்சியின் மேல் மற்றும் கீழ் தட்டு அளவிலான செயல்திறன் நம்முடைய கணிப்பு மற்றும் பங்குச்சந்தையின் கணிப்புகளுக்கும் குறைவானதாகவே நடந்துள்ளது என்று கூறியுள்ளார்.

இலக்கை தவறியது

இலக்கை தவறியது

ஒவ்வொரு ஆண்டுக்கும் 7.6 சதவீதம் மட்டுமே வளர்ச்சியடைந்து நமது மதிப்பீட்டில் ரூ.493 கோடி வருவாய் ஈட்டப்படும் என எதிர்பார்க்கப்பட்ட வேளையில் ரூ.466 கோடி மட்டுமே ஈட்டப்பட்டுள்ளது.

விளம்பர வருவாய்

விளம்பர வருவாய்

ஒவ்வொரு ஆண்டும் விளம்பர வருவாயில் 4.5% சரிவு கண்டு ரூ.234 கோடி மட்டுமே விளம்பரங்களின் மூலம் வரும் வருமானம் இருப்பதே இதற்கான முதன்மையான காரணமாக சன் தொலைக்காட்சி நிறுவனம் .

புதிய கட்டுப்பாடுகள்

புதிய கட்டுப்பாடுகள்

இந்திய தகவல் தொடர்பு ஒழுங்குமுறை வாரியம் (TRAI) சமீபத்தில் வெளியிட்ட கட்டுப்பாட்டு விதிகளில் ஒரு மணி நேரத்தில் 12 நிமிடங்கள் மட்டுமே விளம்பரங்களை வெளியிட வேண்டும் என்று கூறியுள்ளது. இந்த வெளியீட்டு கட்டுப்பாடுகளால் தான் விளம்பர வருவாய் வீழ்ச்சி கண்டுள்ளது.

12% வளர்ச்சி

12% வளர்ச்சி

விளம்பர வருவாயில் ஏற்பட்ட இழப்பை மூன்றாம் காலாண்டில் ஈடு செய்ய முடியும் எனவும், நடப்பு நிதியாண்டில் தொடர்ந்து 12% வளர்ச்சியை பராமரிக்க முடியும் என்றும் நிர்வாகம் உறுதிப்படுத்தியுள்ளது.

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+