அதிக பணம் பறிக்கும் மருத்துவமனைகளுக்கு செக்!!! ஐஆர்டிஏ-வின் அதிரடி திட்டம்...

Subscribe to GoodReturns Tamil
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

மும்பை: ஹெல்த் இன்சூரன்ஸ் என்ற பெயரில் பல நிறுவனங்கள், மருத்துவமனைகள் மக்களை ஏமாற்றி வருகிறது. இதை தடுக்கும் வகையில் இன்சூரன்ஸ் ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (IRDA), இன்சூரன்ஸ் இன்ஃபர்மேஷன் பீரோ (IIB) இணைந்து மருத்துவமனைகளுக்கு தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்க முடிவு செய்துள்ளது. இதனால் மருத்துவமனையின் செயல்பாடுகள் அனைத்தும் இவ்விரு அலுவலகத்தின் கீழ் செயல்படும் என ஐஆர்டிஏ வெளியிட்ட அறிக்கையில் குறிப்பிட்டு இருந்தது.

இதுகுறித்து ஐஆர்டிஏ சேர்மனிடம் கேட்டபோது "நாங்கள் மருத்துவமனைகளுக்கு தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண் வழங்கும் முயற்சியல் தீவரமாக உள்ளோம். இதனால் தேசிய அங்கீகாரம் அமைப்புடன் மிகவும் நெருக்கமாக செயல்பட்டு வருகிறோம். இத்தனிப்பட்ட அடையாள குறியீட்டு எண்ணில் மருத்துவமனை அமைந்துள்ள இடத்தின் பின் கோட் மற்றும் மருத்துவமனையின் பெயரும் அடங்கும்." என இந்திய வியாபாரிகள் சபையின் முக்கிய கூட்டத்தில் கலந்து கொண்ட அவர் தெரிவித்தார்.

சிகிச்சைக்கான செலவு

சிகிச்சைக்கான செலவு

இப்புதிய செயல் திட்டத்தின் மூலம் இந்திய மருத்துவ துறையில் சிகிச்சைக்கான செலவை தெரிந்து கொள்ளவும், அதிகப்படியாக வசூல்செய்யும் மருத்துவமனைகளை கண்டறியவும் இத்திட்டம் உதவும் என விஜயன் தெரிவித்தார்.

மக்களை ஏமாற்றும் மருத்துவமனை

மக்களை ஏமாற்றும் மருத்துவமனை

இன்சூரன்ஸ் இன்ஃபர்மேஷன் பீரோவின், தலைமை நிர்வாக அதிகாரி ராகவன் கூறுகையில் "இத்திட்டத்தின் மூலம் அதிகப்படியாகவும், குறைவாகவும் பண வசூல் செய்யும் மருத்துவமனைகளை கண்டறிய உதவும்" என தெரிவித்தார்.

30,000 மருத்துவமனைகள்

30,000 மருத்துவமனைகள்

மேலும் அவர் "தற்போது 30,000 மருத்துவமனைகளை இத்திட்டத்தில் சேர்த்துள்ளோம் இதன் மூலம் எந்த இடத்தில் மக்கள் ஏமாற்றபடுகிறார்கள் என கண்டறிய உள்ளோம்" என தெரிவித்தார்.

நல்லதோர் வீணை செய்வோம்..

நல்லதோர் வீணை செய்வோம்..

உண்மையிலே அது ஒரு தொடக்கம், மருத்துவமனைக்கு சென்றாலே ஆயிரம் கணக்கில் செலவு ஆகிறது. அதை குறைக்க அரசு எடுத்திருக்கும் இத்திட்டம் வரவேற்கதக்கது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

English summary

IRDA plans unique identity code for hospitals

In a bid to bring down frauds in health insurance, the Insurance Regulatory and Development Authority and Insurance Information Bureau (IIB) has planned to provide a unique identity code for hospitals.
Company Search
Thousands of Goodreturn readers receive our evening newsletter.
Have you subscribed?
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X