முதலீட்டு சந்தையில் கலக்கட்டும் 4 முக்கிய மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள்!!..

சென்னை: நம் வாழ்க்கை முறையில் பணத்திற்கான தேவை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. இந்த பணத்தை சம்பாதிப்பது கடினம் என்றால் அதை சரியான வழியில் பாதுகாப்பது அதைவிடக் கடினம். எனவே நாம் கஷ்டப்படு உழைத்து சம்பாதித்த பணத்தை பாதுப்புடனும், லாபகரமான முறையிலும் முதலீடு செய்வது மிகவும் முக்கியம்.

முதலீட்டுச் சந்தையில் அபரிமிதமான வளர்ச்சியுடன் முதலீட்டுக்குப் பாதுகாப்பும் அளிக்கும் மியூச்சுவல் ஃபண்ட் திட்டங்கள் ஏராளமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றில் 4 புதிய திட்டங்களைப் பற்றி இங்கே அறிந்து கொள்வோம்.

ஐசிஐசிஐ கேபிடல் புரொடக்ஷன் ஃபண்ட் சீரீஸ் 4

ஐசிஐசிஐ கேபிடல் புரொடக்ஷன் ஃபண்ட் சீரீஸ் 4

பெயருக்குத் தகுந்த மாதிரி, இந்தத் திட்டம் உங்கள் மூலதனத்தைப் பாதுகாப்பதாக உறுதியளிக்கிறது. உங்கள் முதலீட்டின் ஒரு பகுதி, அதிக வட்டி தரும் கடன் பத்திரங்களிலும், மீதித் தொகை நல்ல லாபம் பெறுவதற்காக பங்கு சந்தையிலும், பங்கு பத்திரங்களிலும் முதலீடு செய்யப்படும். இந்த திட்டத்தில் டிவிடென்ட் வருடாந்திர முறையில் அல்லது குவிப்பு முறையில் 5 ஆண்டுகளுக்கு சேர்த்து மொத்தமாகவும் பெற்றுக் கொள்ளலாம்.

எல்ஐஸி-யின் நோமுரா கேபிடல் புரொடக்ஷன் ஃபண்ட் சீரீஸ் ஐ

எல்ஐஸி-யின் நோமுரா கேபிடல் புரொடக்ஷன் ஃபண்ட் சீரீஸ் ஐ

நடைமுறையில் உள்ள முதலீட்டுப் பாதுகாப்பு சார்ந்த திட்டங்களின் எல்லா அம்சங்களும் இதிலும் உள்ளன. முதலீட்டுப் பாதுகாப்புக்காக திட்டம் நிறைவடையும் காலம் வரை (36 மாதங்கள்), நிதியின் ஒரு பகுதி நிலையான வருமானம் அளிக்கக் கூடிய பத்திரங்களில் முதலீடு செய்யப்படுகிறது. ஷேர் மற்றும் ஷேர் தொடர்பானவற்றில் மீதித் தொகையை முதலீடு செய்து லாபம் ஈட்டப்படும். குறைந்த ரிஸ்க் மட்டுமே எடுக்க விரும்புபவர்களுக்கு இந்த திட்டம் சிறப்பானது.

ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்

ஆக்ஸிஸ் ஸ்மால் கேப் ஃபண்ட்

இது ஒரு ஐந்தாண்டு பங்கு திட்டமாகும், சிறு மூலதன நிறுவனங்களில் இந்த நிதி முதலீடு செய்யப்படுவதால் இதில் லாபமும் அதிகம், அதற்கேற்றபடி ரிஸ்க்கும் அதிகம். 'ரிஸ்க் எடுப்பது எனக்கு ரஸ்க் சாப்பிடுற மாதிரி' என்று சொல்பவர்கள் இதில் முதலீடு செய்யலாம்.

ரிலையன்ஸ் குளோஸ்-எண்டட் சீரீஸ் எ

ரிலையன்ஸ் குளோஸ்-எண்டட் சீரீஸ் எ

ரிலையன்ஸ் மியூச்சுவல் ஃபண்ட் நிறுவனத்தின் இந்த திட்டம் 5 ஆண்டு லாக்-இன் (Lock-in) பீரியட் கொண்டது. (வெளியே வர முடியாது, அதானே பார்த்தேன்!) நிதியை எல்லா விதமான முதலீட்டு திட்டங்களிலும் முதலீடு செய்து போர்ட்ஃபோலியோவை நெகிழ்வுத் தன்மையுடன் வைத்துக் கொள்ள முடிவு செய்துள்ளது. நவம்பர் 15 முதல் 29 வரை இத்திட்டத்தில் சேரமுடியும்.

முழுக்க முழுக்க ஷேர் மார்க்கெடில் இறங்கி அடிக்கும் இந்தத் திட்டம், 'வாழ்க்கையில எதுல ஸார் ரிஸ்க் இல்லை?' என்ற டைப் ஆட்களுக்கு ஏற்ற திட்டம்.

 

 

More From GoodReturns

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+